1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமானையே நினையுங்கள். பிரமனூரில் விளங்கும் எம் பெருமானையே மனத்தால் போற்றித் துதித்து உய்வீர்களாக.
சிவபெருமானையே நினையுங்கள். பிரமனூரில் விளங்கும் எம் பெருமானையே மனத்தால் போற்றித் துதித்து உய்வீர்களாக.
சிவபெருமானைத் தரிசிக்க எண்ணும் அன்பர்களே! நல்ல வேணுபுரத்தில் விளங்கும் தாணுவின் திருவடிகளைப் பேணி உய்வீர்களாக.
சிவபெருமானை எம் தலைவன் எனக்கூறும் அன்பர்களே! அன்போடு ஒளி விளங்கும் புகலிப் பதியில் விளங்கும் ஆதியின் திருவடிப் பெருமைகளை ஓதி உய்வீர்களாக.
அருள் வழங்கும் குறிப்போடு உமையம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவன், 'வெங்குருவில்’ நிலையாக உள்ள எங்கள் ஈசன் ஆவான்.
ஒளி பொருந்திய. பிறைமதி பொருந்திய சடைமுடி உடையவனாய்த் தோணிபுரத்தில் விளங்கும் ஆணிப் பொன் போன்ற இறைவனைக் கண்டு தொழுவீர்களாக.
பாம்பு பொருந்திய சடைமுடியோடு பூந்தராயில் விளங்கும் பெருமானை. ஏந்திய தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவன் என்று கூறுவார்கள்.
கருமை பொருந்திய கண்டத்தை உடையவனாய்ச் சிரபுரத்துள் எழுந்தருளிய அரசனை நாள்தோறும் பரவி உய்வீர்களாக.
தேன் பொருந்திய சோலைகளை உடைய புறவமாகிய நல்ல ஊரில் எழுந்தருளிய இறைவன் திருநாமங்களை, நெஞ்சமே! நீ மறவாதே.
தென் திசையில் உள்ள இலங்கை மன்னனாம் இராவணனாகிய அரக்கனைச் சண்பை மன்னனாகிய சிவபிரான் கயிலை மலையிடைப் படுத்து அன்று நெரித்த வரலாற்றை நின்று நினைத்துப் போற்றுவீர்களாக.
பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி முயலும் பரம்பொருளாகிய சீகாழிப் பதியில் விளங்கும் இறைவனது கருணைப் பொழிவைச் சார்ந்து காத்தலும் நினைத்துக் கொண்டே இருக்கிறது என் உள்ளம்.
புத்தர் சமணர் ஆகியோரை அணுகாத, ‘கொச்சைவயத்து’ மன்னனாகிய சிவபிரானின் ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.
‘கழுமலத்தில்’ உறையும் குற்றமற்ற. ஞானசம்பந்தன் அருளிய மொழிகளாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப் பெருமானைத் தொழும் மனத்தவர் ஆகுக.