1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் தமது முடியைச் சூழ்ந்துள்ள சடைமுடியின்மேல் வளர்ச்சி பெறாத இளம் பிறையைச் சூடியிருப்பவர். ஒரு தலைப் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டியிருப்பவர். சிறிதும் வெறுத்தற்கு இயலாத புகழானவர். திருஆப்பனூரில் எழுந்தருளியுள்ள இப்பெருமானை விரும்பிப் பற்றுகின்ற உள்ளம் உடையவர்கள், தங்களின் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவார்கள்.