1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் திருநல்லூரில் எழுந்தருளி உள்ளார். இவர் நாதப்பறை கொட்டும் தாளத்திற்கு ஏற்பவும், பூத கணங்கள் சூழவும், திருக்கையில் அனலேந்தியும் விருப்பத்தோடு நடனம் ஆடுபவர். இப்பெருமானைக் காலையிலும் மாலையிலும் மனதில் விருப்பத்தோடு உதித்து எழுகின்ற அன்பினால், தொடர்ந்து வணங்குபவர்களைப் பாவம் அணுகாது.