1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் பகைவர்களாகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் தீயில் எரிந்து அழியுமாறு அம்பை எய்தவர். இப்பெருமான், நீரைத் தேக்கும் மடைகளை உடைய நீர்வளம் மிக்க அம்பர் மாகாளத்தில் எழுந்தருளி உள்ளார். விடை எழுதிய கொடியை உடையவரும், வெண்மையான பிறை மதியை அணிந்தவரும், எம் தந்தையுமாகிய இப்பெருமானின் திருவடிகளைப் போற்றித் துதிப்பவர்களை வினைகள் சேருவதில்லை.