1
சொற்பிரிப்பு
உரை
மரங்கள் வளர்ந்த விரிந்த பரப்புடைய பொழில்களில் இளமயில்கள் ஆடுகின்றன. வெண்மையான நிறத்துடன், அருவிகள் திண்ணென்ற ஒலியுடன் விழுகின்றன. எரி போன்று ஒளிருகின்ற, ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவமாய். மலைச்சாரலை உடைய தலம் திருஇடைச்சுரமாகும். சிவபெருமான் வரிகளையும் ஒளியையும் உடைய பாம்பை இடையிலே கட்டியிருக்கின்றார். நீண்ட சடைமுடிமீது வளரும் பிறைமதியைச் சூடியுள்ளார். அத்தியாளியின் உருவம் பொறித்த வீரக்கழலைக் காலின்கண் வெற்றி பெறச் சூடியுள்ளார். கனலை ஏந்தி சுடுகாட்டைத் தனது அரங்காகக் கொண்டு ஆடுகின்றார். இத்தகைய இறைவரது இயல்புதான் என்னே?