1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமானின் பக்தனான மார்க்கண்டேயன், வைகறைப் பொழுதில் இறந்ததும் நல்லதுமான மலர்களைக் கொண்டு நாள்தோறும் இறைவனின் திருவடிகளில் பரவி கைகளால் தொழுபவன். இந்த பக்தனின் உயிரைக் கவர, சினந்து வந்தான் யமன். அந்த யமனை, ஓலமிட்டு அலறுமாறு செய்து, தன்முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்தவர் எம்பெருமானார் சிவபெருமான். இவர் உமையம்மைக்கு விருப்பமானவர். வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் மாலை நேரத்தில் கடல் அலைகள் சுருளாகக் கரையை அணுகி சங்கையும் பவளங்களையும் தள்ளிக் கொணர்ந்து வந்து கரையிற் _சேர்க்கும். கரைகளில் சோலைகள் வளமாக உன்ளன. இத்தகைய வளம் மிக்க வெங்குருவினுள் சிவபெருமான் வீற்றிருந்து அருள் புரிகின்றார்.