1
சொற்பிரிப்பு
உரை
தேன் நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பி அணிந்தவராகச் சிவபெருமான் வீற்றிருக்கின்றார். இவர், தன்னை மதியாத அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்தவர். சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய மன்மதனின் உடல் பொடியாகும்படி தன் நெற்றிக் கண்ணால் விழித்து அழித்தவர். இந்த இறைவர், சான்றோர்களும், வானோர்களும் போற்றித் துதிக்க உமையம்மையாரோடு புறவம் என்னும் சீகாழிப் பதியில் வீற்றிருந்து அருள் புரிகின்றார்.