1
சொற்பிரிப்பு
உரை
திருக்கானூரில் அமர்ந்திருக்கும் சிவபெருமான் நெற்றிக் கண்ணை உடையவர். இடபத்தில் ஊர்ந்து வரும் செல்வர். வானில் ஒளியோடு விளங்கும் சூரிய சந்திரர் போன்ற ஒளி பொருந்திய திருமுடியை உடையவர். திருமுடியில் வன்னிக் காடுகளில் பூத்த தேன் நிரம்பிய கொன்றை மலர், தானே வந்து தங்கிய கங்கை, பிறைச் சந்திரன் ஆகியவற்றைச் சூடி இருப்பவர். மான் போன்ற மருண்ட கண்களை உடைய உமையம்மை கண்டு மகிழ, மாலைக் காலத்தில் நடனம் புரிபவர் ஆவார்.