1
சொற்பிரிப்பு
உரை
திருக்குடமூக்குக் காரோணத்தில் எழுந்தருளியுள்ள எந்தையராகிய சிவபெருமான். கார் மேகம் போன்ற கருமை பொருந்திய கண்டத்தினராய், எட்டுத் தோள்களோடு விளங்குகின்றார். இவர் அருள் செய்யும் இளமைக் கோலத்தில் விளங்குகின்றார். கச்சணிந்த கொங்கைகளையுடைய பார்வதி தேவியை ஒருபாகமாகக் கொண்டுள்ளார். நீண்ட சடைமுடியில் நீர் மயமான கங்கையையும் பிறையையும் சூடியுள்ளார். இயல்பான இருவிழிகளோடு நெற்றியில் மூன்றாவது கண்ணுடையவர். கூரிய மழு என்னும் ஓர் ஆயுதத்தை ஏந்தியுள்ளார்.