1
சொற்பிரிப்பு
உரை
திருநறையூரில் பெருமை உடைய மறையவர்கள் தங்கள் இல்லங்களில் வேதப் பொருட்களை உள்ளடக்கிய இசைப்பாடல்களைப் பாடுகின்றனர். அதனைக் கேட்டுச் சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மகிழ்வெய்திப் பாடித் தேனை உண்ணுகின்றன. இவ்வூரில் சித்தீச்சரத்து இறைவராக விளங்கும் சிவபெருமான் பிறைசூடிய சடையர்; புலித்தோலை உடுத்தியவர்; பிளந்த வாயினை உடைய பாம்பை அணிந்தவர்; விடக்கறை பொருந்திய கழுத்தினை உடையவர்; பிரமனது தலையோட்டை ஏந்திய கையினை உடையவர்; எலும்புகளால் கோர்க்கப்பட்ட மாலையினை அணிந்த கங்காளர் ஆவார்.