1
சொற்பிரிப்பு
உரை
பன்றிகள் கூட்டமாக இறங்கி வரும் சாரலை உடைய திருஈங்கோய் மலையில் சிவபெருமான் உலக மக்கள் உணர்ந்து போற்றுமாறு எழுந்தருளி உள்ளார். இவர், வானத்தில் உயர்ந்து விளங்கும் குளிர்ந்த சந்திரன் உறையும் சடைமுடியில் ஊமத்தம் மலர்களைச் சூடி இருக்கின்றார். தேன் போன்ற இனிய மொழிகளையும் மான்விழி போன்ற கண்களையும் உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு இருக்கின்றார். இவர், இடுகாட்டில் இரவில் எரியேந்தி ஆடும் இறைவர் ஆவார்.