1
சொற்பிரிப்பு
உரை
திருப்பழனத்து இறைவரான சிவபெருமான் வேதங்களை உண்டாக்கியவர். மார்பில் வெண்மையான பூணூலை அணிந்து இருப்பவர். வெண்மையான எருதின்மீது ஏறிப் பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவு பெற வருபவர். இப்பெருமானை முழுமுதற்பொருள் (நாதனே) எனவும், இரவலனே (நக்கனே) எனவும், நம்பப்படத்தக்கவனே (நம்பனே) எனவும், போற்றி நின்று திருவடிகளைத் தொழுகின்ற அடியவர்களின் பாவங்களைத் தீர்த்து அருளுவார்.