1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் தன் சடைமீது, ஆரவாரித்து வரும் கங்கை, ஆத்திமலர், ஆடும் பாம்பு, ஒருகலையாகக் குறைந்த பிறைமதி ஆகியவைகளைச் சூடியிருக்கிறார். உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டிருக்கிறார். இவர் எழுந்தருளிய தலம் திருப்பூவணம் ஆகும். இது வைகை ஆற்றின் அலைகளும், வயல் வளமும், புகழும் உடைய தலமாகும். திருப்பூவணமானது, நீதி தவறாமல் முடிசூடி ஆ ளுகின்ற வேந்தர்களான பாண்டியர், சேரர், சோழர் ஆகிய மூவேந்தர்களும் வணங்கும் தலமாகும். சூடிய உமையொரு பாகன் இடம் பூவணம் என்கின்றது.