1
சொற்பிரிப்பு
உரை
பெரியவனாகிய பிரமன் நான்கு திருமுகத்தை உடையவன். வேதகீதங்களை உச்சரிப்புத் தவறாதவாறு பாடுபவன். தாமரை மலர் மேல் விளங்குபவன். இந்தப் பிரமன் விரும்பி, வழிபட்டு ஆட்சிபுரிந்த பிரமபுரத்தில் விளங்கும் சிவபெருமானே! எரியும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தியிருக்கின்றீர். அழகிய மற்றொரு கையில் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து அந்த மண்டை ஓட்டையே உண்கலனாகக் கொண்டு வீதிகள்தோறும் பலிஏற்பதுபோல் வந்து வரிகளை உடைய வளையல்களை அணிந்த (முனி பத்தினி) மகளிரிடம் பிச்சை வாங்காது, அவர்களின் அழகைக் கவர்ந்து செல்கின்றீரே! இது ஏன்?