1
சொற்பிரிப்பு
உரை
அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாட்கள் வீணாகிப் போவதற்கு முன்பே, நீலகண்டனான சிவபெருமானுக்கு அடியவராக விளங்கி, அவரிடத்தில் அன்பு செய்வாயாக. அப்பெருமானின் திருநாமங்களை எப்பொழுதும் கேட்பாயாக. அவ்வாறு கேட்டால் நம் சுற்றத்தினரும் செழித்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிவான். நம் மனத்தின் மாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருளுவான். அவ்விறைவன், திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளி உள்ளான்.