1
சொற்பிரிப்பு
உரை
வளமையான அலைகளோடு கூடிய நீர் நிலைகளில், மலர்ந்த தாமரை மலர்களின் தேனைக் குடித்துத் தன் பெண் வண்டோடு களித்து, சிறந்த அலைபோல மேலும் கீழுமாய் அசையும் நடையில் இசைபாடும் அரச வண்டே! என்மேல் பரிவு கொள்ளாய்! என் பிரானாகிய சிவபெருமான் ஒளி பொருந்திய இளம் பிறையை முடியிற் சூடியுள்ளார். எலும்பு மாலைகளை மார்பில் அணிகலனாகப் பூண்டுள்ளார். திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக் கூத்து ஆடுகின்றார். அவரிடம் சென்று எனது பிரிவாற்றாத நிலையை ஒரு முறையேனும் பகர்வாயாக.