1
சொற்பிரிப்பு
உரை
வெளிப்படுவதற்குரிய நேரம் வரும் வரைக்கும் வெளிப்படாமல் மறைந்து இருக்கும் நோய்கள், இனி வரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியன இவைகள்தான் நமது வாழ்க்கையில் அடங்கி இருப்பனவாம். இத்துன்ப வாழ்க்கை நீங்கத் தவம் புரிதலுக்கு ஏற்ற இடத்தை நீவிர் விரும்புகின்றீர். அது, அகழியும் மதிலும் சூழ்ந்து, எங்கும் உள்ள வீடுகள் தோறும் வேதங்கள் ஒலிக்கும் இடமான கடந்தைத் தலமாகும். அந்தத் தலத்தின் தலைவனாகிய சிவபெருமானின் திருவடி நிழலின்கீழ், அவருக்கு ஆளாகுமாறு, அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் சென்று தொழுது தவம்புரிவீர்களாக.