1
சொற்பிரிப்பு
உரை
மிகவும் உயர்ந்த மெய்ப்பொருளை அன்போடு உள்ளத்தில் எண்ணினால், அது நற்கதிக்கு செல்லும் நுழைவாயிலாக அமைகிறது. அத்தகைய மெய்ப்பொருளாய், வெண்மையான ஒளி வடிவினனாய், சிவபெருமான் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ளார். இந்த ஒளிமயமான இறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகில் உயர்ந்தவர் ஆவர். அந்த ஒளிமயமான இறைவனைக் கண்டு தெளிந்தவர்கள் தேவர்கள் ஆவர்.