1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமானைப் பருத்த குள்ளமான பூதகணங்கள் சூழ்ந்து இருக்கின்றன. அவர்தம் கையில் அனல் ஏந்தியிருக்கின்றார். வண்டுகள் மருளிய இந்தளம் என்னும் பண்ணைப் பாடுகின்றன. அவர் பொன் போன்று விரிந்து மலர்ந்த கொன்றை மலர் மாலையை அணிந்திருக்கின்றார். கெண்டை மீன்கள் துள்ளி விளையாடும் தெளிந்த நீரை உடைய, கெடில நதியின் வடகரையில் உள்ள, திருவதிகை வீரட்டானத்தில் இப்பெருமான் ஆடுகின்றார்.