1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் யான் தூங்கும் பொழுது என் கனவில் எழுந்தருளுவார். தம்மைத் தொழுமாறு செய்விப்பார். உயிர்களுடைய முனைப்புக் காலத்தில் மறைந்திருப்பார். அன்பு செய்யும் காலத்தில் என் நெஞ்சம் புகுந்து தம்மை நினையுமாறு செய்பவர். நவஞானி என்ற பார்ப்பனியை அவள் கணவன் கொன்றான். அவள் அவனைப் பழிவாங்க எண்ணி மறுபிறவியில் அவன் மனைவி போல் நடித்து, அவனை வஞ்சித்துக் கொன்றாள். அவள் கணவனுக்குப் பிணை கொடுத்த இவ்வூரில் வாழ்ந்த எழுபது வேளாளர்களும் தீப்புகுந்து உயிர் துறந்தனர். (குறிப்புரையில் முழு விபரம் காண்க).