1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் முழுமதியினது பாகமாக விளங்கும் ஒரு கலைச்சந்திரனை தம் ஒளி பொருந்திய சடையில் விளங்கித் திகழுமாறு சுற்றிக் கட்டியுள்ளார். அவர் பாம்புகளை அணிந்துள்ளார். பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவர எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய் இருக்கின்றார். அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் தங்கியிருக்கின்ற நீலமணி போன்ற கழுத்துடையவரே! கொல்லி மழவன் மகளாகிய இப்பெண்ணை இவ்வாறு மயங்கச் செய்வது உமக்கு மகிமையாகுமோ என்று பாடியருளினார்.