1
சொற்பிரிப்பு
உரை
திருப்பேணுபெருந்துறையில் உறையும் சிவபெருமான் படம் பொருந்திய பெரிய நாகம், பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர், வெண்மையான பன்றிக் கொம்பு ஆகியவற்றை தலையில் அணிந்தவர். அகமலர்ச்சி உடையவர். பலர் இல்லங்களுக்கும் சென்று “ஐயம் இடுக' என்று கேட்பவர். கடமை தவறாதவர்களுக்குச் செல்வத்துட் செல்வமாய் இருக்கின்றவர். அழகிய மான்விழி போன்ற கண்களையும், தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர் இவர். நிலைத்த பழமையான புகழை உடையவர்.