1
சொற்பிரிப்பு
உரை
சிவபிரான் திருநீறு அணிந்த மார்பினன். அவர் வீரம் மிக்க விடைமீது ஏறி வருவார். பூத கணங்கள் அவரைப் புடை சூழ்ந்து வரும். கொடிகள் கட்டிய ஊர்களில் திரிந்து பற்பல வாசகங்களைக் கூறிப் பலியேற்பது அவர் வழக்கம். அவர் அழகிய வாள் போன்ற நெடிய கண்களை உடைய உமையம்மையைத் தனது இடப்பாகத்தில் கொண்டுள்ளார். அவர் வாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளி அருள் ஆட்சி செய்து வருகிறார். அவ்வூர் சென்று மணம் கமழும் சிறந்த மலர்களால் அவரை அருச்சித்து அக்கறைமிடற்று அண்ணலைக் காண்போமாக.