1
சொற்பிரிப்பு
உரை
என்னுடைய நெஞ்சே! சிவபிரான், ஊர்கள்தோறும் உலாவுவதால் கிடைக்கும் உணவைப் பெற்றுக் கொள்கிறார். உலக மக்கள் போற்றி வழிபடக் கங்கைநீரைத் தம் திருமுடியில் ஏற்றுள்ளார். கங்கை நீர் உலாவுகின்ற திருமுடியானது மேல்நோக்கிய சிவந்த முடியாக உள்ளது. திருநறையூரில் விளங்கும் சித்தீச்சரத்தல் தலைமைத் தன்மையுள்ள சிவபிரான் எழுந்தருளி இருக்கிறார். அந்த நகரில் சீருடைய மறையவர்கள் வாழ்கின்றனர். இவற்றை உணர்ந்து நெஞ்சே திருநறையூர்ச் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக.