1
சொற்பிரிப்பு
உரை
முற்பிறவிகள் பலவற்றில் செய்த ஆகாமிய வினைகளும் சஞ்சிதமும் உண்கவர் உழன்று பக்குவப்பட்டு, அதன் பின்னர், பிராரத்தம் வரும் காலையில், ஆன்மாக்கள் இப்பிராரத்த வினைகளைப் புசிக்கும் நிலை எய்தும். அந்நிலையில் இப்புசிப்பிற்கு முற்பட்டவை எல்லாம் நீங்குதற்குரிய வழியொன்றுண்டு. திருப்புன்கூரில் சிவபிரான் ஆதி அந்தம் இல்லாத தலைவராயும் மணம் நிறைந்து கமழும் செந்நிறச் சடைமுடி “உடையவராகவும் எழுந்தருளியுள்ளார். அவரை, நெஞ்சே நீ சிந்தை செய்வாயாக. இதுவே வழி, என்றவாறு.