திருமுறை 1 · 1.024 · 11

சீகாழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
சீர்காழி - 10-காழி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசாகாவா யெனநின் றேத்துங் காழியார்மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம்பாவா ரின்சொற் பயிலும் பரமரே.
சொற்பிரிப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!காவாய்!” என நின்று ஏத்தும் காழியார்,மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.
உரை

பாடல்களின்‌ சொல்லும்‌ பொருளுமாகக்‌ கலந்து நிற்கும்‌ பரமன்‌ சிவபிரான்‌. அவரைச்‌ சீகாழிப்‌ பதியினர்‌, “கொன்றைப்‌ பூக்கள்‌ பொருந்திய, முறுக்கேறிய செஞ்சடையினை உடைய ஈசா! எங்களைக்‌ காவாய்‌' என நின்று துதித்துப்‌ போற்றுகிறார்கள்‌. அந்தச்‌ சிவபிரானே, மனம்‌ ஒன்றாத அரக்கர்களின்‌ மூன்று புரங்களையும்‌ அழித்தார்‌.

2

எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்கந்த மாலை கொடுசேர் காழியார்வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்அந்தி நட்டம் ஆடும் அடிகளே.
சொற்பிரிப்பு
“எந்தை!” என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி,கந்தமாலை கொடு சேர் காழியார்,வெந்த நீற்றர், விமலர் அவர் போல் ஆம்அந்தி நட்டம் ஆடும் அடிகளே.
உரை

சிவபிரான்‌ அந்திக்‌ காலத்தில்‌ நடனம்‌ ஆடும்‌ அடிகள்‌ ஆவார்‌. தேவர்கள்‌, “எந்தையே” என்று அன்போடு அழைப்பர்‌. ஆலயத்துள்‌ புகுந்து குழுமுவர்‌. மணம்‌ மிக்க மாலைகளை அணிவித்தல்‌ பொருட்டுச்‌ சேருவர்‌. அவர்களால்‌ மாலை அணிவிக்கப்‌ பெறும்‌ சிவபிரான்தான்‌ சீகாழிப்பதியார்‌ ஆவார்‌. குற்றமற்றவரான அவரே நன்றாகச்‌ சுட்டு எடுத்த திருநீற்றை அணிந்தவர்‌ ஆவார்‌.

3

தேனை வென்ற மொழியா ளொருபாகங்கான மான்கைக் கொண்ட காழியார்வான மோங்கு கோயி லவர்போலாம்ஆன இன்பம் ஆடும் அடிகளே.
சொற்பிரிப்பு
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்,கானமான் கைக் கொண்ட காழியார்,வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்ஆன இன்பம் ஆடும் அடிகளே.
உரை

சிவபிரான்‌ முற்றிய இன்பத்தோடு ஆடுகின்றார்‌. இனிப்பில்‌ தேனை வென்று விளங்கும்‌ மொழிகளைப்‌ பேசுகின்ற உமையம்மையை ஒருபாகமாகக்‌ கொண்டவர்‌. காட்டில்‌ திரியும்‌ இயல்பினதாகிய மானைக்‌ கையில்‌ ஏந்தி அவர்‌ விளங்குகிறார்‌. அவரே சீகாழிப்பதியில்‌ உறையும்‌ இறைவன்‌ ஆவார்‌. அவர்‌ வானளாவிய உயர்ந்த திருக்கோவிலில்‌ விளங்குபவர்‌ ஆவார்‌.

4

மாணா வென்றிக் காலன் மடியவேகாணா மாணிக் களித்த காழியார்நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்பேணார் புரங்கள் அட்ட பெருமானே.
சொற்பிரிப்பு
மாணா வென்றிக் காலன் மடியவேகாணா மாணிக்கு அளித்த காழியார்,நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்பேணார் புரங்கள் அட்ட பெருமானே.
உரை

சிவபிரான்‌, தம்மைப்‌ பேணி வழிபடாத அசுரர்களின்‌ முப்புரங்களை அழித்தவர்‌. மாட்சிமை இல்லாத வெற்றியை உடைய காலனை மடியுமாறு செய்தவர்‌. தம்மை அன்றி வேறொன்றையும்‌ காணாத மார்க்கண்டேய முனிவருக்கு என்றும்‌ பதினாறு ஆண்டோடு விளங்கும்‌ வரத்தை அளித்து அருளியவர்‌. அவரே, சீகாழிப்‌ பதியில்‌ உறையும்‌ இறைவன்‌ ஆவார்‌. அந்தச்‌ சிவபிரானே, முப்புரங்களை அழித்தற்பொருட்டு நாணில்‌ பூட்டிய அம்பைத்‌ தொடுத்தவரும்‌ ஆவார்‌.

5

மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்காடே றிச்சங் கீனும் காழியார்வாடா மலராள் பங்க ரவர்போலாம்ஏடார் புரமூன் றெரித்த இறைவரே.
சொற்பிரிப்பு
மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல்காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார்,வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம்ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.
உரை

குற்றம்‌ பொருந்திய அசுரர்களின்‌ புரங்கள்‌ மூன்றையும்‌ எரித்து அருளியவர்‌ சிவபிரான்‌. அருகில்‌ உள்ள கடல்நீரின்‌ அலைகளால்‌ எறியப்பட்ட சங்குகள்‌, வயல்களில்‌ விளைந்த செந்நெற்பயிர்களுடைய செறிவில்‌ ஏறி முத்துக்களை ஈனும்‌. அந்த அளவு சீகாழி செழிப்புள்ளது. அங்குச்‌ ஏவபிரான்‌ சீகாழிப்‌ பதியினராக விளங்குகிறார்‌. அவர்‌ வாடாமலர்களைச்‌ சூடி விளங்கும்‌ பார்வதி தேவியைத்‌ தம்‌ திருமேனியின்‌ ஒரு பங்காக உடையவர்‌ ஆவார்‌.

6

கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்கங்கை புனைந்த சடையார் காழியார்அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாம்செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே.
சொற்பிரிப்பு
கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக்கங்கை புனைந்த சடையார், காழியார்,அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம்செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.
உரை

சிவபிரான்‌, சிவந்த கண்களை உடைய அரக்கர்‌ மூவருடைய திரிபுரங்களை எரித்தார்‌. அவர்‌ கோங்கு, செருந்தி கொன்றை மலர்‌ இவற்றுடன்‌ தம்முடைய சடைமுடியில்‌ கங்கையை அணிந்துள்ளார்‌. சீகாழி நகரில்‌ விரும்பி உறைந்த காரணத்தால்‌ அவரே காழியார்‌ எனப்படுவார்‌. அச்சிவபிரான்‌ சீகாழியில்‌ விருப்பமாகத்‌ தங்க, தாம்‌ அணிந்துள்ள பாம்புகளை உடல்‌ உறுப்புக்களில்‌ வைத்து ஆட்டி வருபவராகவும்‌ உள்ளார்‌.

7

கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடும்கல்ல வடத்தை யுகப்பார் காழியார்அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்பல்ல விடத்தும் பயிலும் பரமரே.
சொற்பிரிப்பு
கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும்கல்லவடத்தை உகப்பார் காழியார்,அல்ல இடத்தும் நடந்தார் அவர்போல் ஆம்பல்ல இடத்தும் பயிலும் பரமரே.
உரை

பரமராகிய சிவபிரான்‌ எல்லா இடங்களிலும்‌ நிறைந்து விளங்கும்‌ பெருமானார்‌ ஆவார்‌. முல்லை நிலத்துக்குரிய ஆன்‌ ஏற்றில்‌ ஊர்ந்து, அதன்‌ முன்னே பூதகணங்கள்‌ வளைந்து நெளிந்து ஆடிச்‌ செல்லக்‌ கல்லவடம்‌ என்றொரு வகைப்‌ பறையின்‌ ஒலியை விரும்புபவர்‌. €காழியில்‌ விரும்பி உறைகின்ற காரணத்தால்‌ அவர்‌ காழியார்‌ ஆவார்‌. தம்மை அறிந்து போற்றுநர்‌ அல்லாதார்‌ இருக்கும்‌ இடங்களிலும்‌ தோன்றி, உயர்வு தாழ்வு கருதாது அருள்‌ வழங்கும்‌ இயல்பினர்‌.

8

எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்கடுத்து முரிய அடர்த்தார் காழியார்எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்பொடிக்கொள்1 நீறு பூசும் புனிதரே.பாடம் : 1பொடிக்கண்
சொற்பிரிப்பு
எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி,கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்;எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே.
உரை

சிவபிரான்‌, பொடியாக அமைந்த திருநீற்றைப்‌ பூசும்‌ தூயவர்‌. கயிலை மலையை இராவணன்‌ எடுத்தான்‌. அவனுடைய முடிகள்‌ நெரியுமாறு தம்‌ கால்‌ விரலை ஊன்றிச்‌ சினந்தார்‌. அவனுடைய ஆற்றல்‌ அழியுமாறு அடர்த்தவர்‌; காழியாராகிய சிவபெருமான்‌. ஆனால்‌, இராவணன்‌ எடுத்த பாடலாகிய சாமகானத்துக்கு இரங்கி அருள்செய்தவர்‌ ஆவார்‌.

9

ஆற்ற லுடைய அரியும் பிரமனுந்தோற்றங் காணா வென்றிக் காழியார்ஏற்ற மேறங் கேறு மவர்போலாம்கூற்ற மறுகக் குமைத்த குழகரே.
சொற்பிரிப்பு
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்தோற்றம் காணா வென்றிக் காழியார்,ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.
உரை

வாழ்நாளைக்‌ கூறுபடுத்திக்‌ கணக்கிட்டு உயிர்‌ கொள்ளும்‌ இயமன்‌ அஞ்சுமாறு அவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள்‌ செய்த குழகர்‌ சிவபிரான்‌ ஆவார்‌. ஆற்றல்‌ உடைய திருமாலும்‌, பிரமனும்‌ அவருடைய அடிமுடிகள்‌ தோன்றும்‌ இடங்களைக்‌ காணாதவாறு வானுற ஓங்கிய வெற்றியை உடையவர்‌. அவர்‌ விருப்பத்துடன்‌ காழிப்பதியில்‌ எழுந்தருளியுள்ளார்‌. அவர்‌ மிக உயர்ந்த ஆன்‌ ஏற்றில்‌ ஏறி, உலா வந்து அருள்‌ புரிபவர்‌ ஆவார்‌.

10

பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்கரக்கும் உரையை விட்டார் காழியார்இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்அருப்பின் முலையாள் பங்கத் தையரே.
சொற்பிரிப்பு
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்கரக்கும் உரையை விட்டார், காழியார்,இருக்கின் மலிந்த இறைவர் அவர்போல் ஆம்அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.
உரை

தாமரை மலரின்‌ அரும்பு போன்ற தன பாரங்களை உடைய உமையம்மையை ஒரு பங்காகக்‌ கொண்டுள்ளவர்‌ தலைவராகிய சிவபிரான்‌. காழியில்‌ எழுந்தருளியுள்ள அவர்‌, உண்மையின்றி மிகப்‌ பிதற்றுகின்ற சமணர்‌ சாக்கியர்களின்‌ வஞ்சக உரைகளைக்‌ . கொள்ளாதவர்‌. அவரே, இருக்கு வேதத்தில்‌ நிறைந்துள்ள இறைவரும்‌ ஆவார்‌.

11

காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்சீரார் ஞான சம்பந் தன்சொன்னபாரார் புகழப் பரவ வல்லவர்ஏரார் வானத் தினிதா இருப்பரே.
சொற்பிரிப்பு
கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச்சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்னபாரார் புகழப் பரவ வல்லவர்ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.
உரை

கோமானாகிய சிவபிரான்‌, நீர்வளத்தால்‌ கருஞ்சேறு பட்டு விளங்கும்‌ வயல்களால்‌ சூழப்பட்ட சீகாழிப்பதியில்‌ விளங்குகிறார்‌. அவர்மீது, சிறப்புப்‌ பொருந்திய ஞானசம்பந்தன்‌ பாடல்களை அருளிச்‌ செய்துள்ளார்‌. அவற்றை ஓதிப்‌ போற்றித்‌ துதிக்க வல்ல உலகோர்‌, அழகிய வானகத்தில்‌ இனிதாக இருப்பர்‌ (உலகர்‌ போற்றிப்‌ புகழுமாறு பரவ வல்லவர்கள்‌).