1
சொற்பிரிப்பு
உரை
திருப்பாற்கடலைக் கடைந்தபோது நஞ்சு தோன்றியதும், அந்த நஞ்சினை உண்டு சிவபிரான் அனைவரையும் காத்ததும் இப்பாடலில் கூறப்பட்டுள்ளன. திருப்பாற்கடலைக் கடைவதற்காக மந்தர மலையை நடுவிலே நிறுத்தினார்கள். சினம் மிக்க, ஒப்பற்ற வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றினார்கள். விண்ணுலகில் வாழும் தேவர்களும் அசுரர்களும் சலசல என்னும் ஒலி தோன்றுமாறு திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். கடைகின்ற காலத்தில் கொல்லும் தன்மை வாய்ந்த. ஆலகால விடம் அக்கடலில் தோன்றியது. அதனால், தேவர்களும் அசுரர்களும் அஞ்சி நடுங்கி சிவபிரானை நோக்கி ஓலமிட்டார்கள். அந்த அளவில், சிவபிரான் அந்த நஞ்சை உண்டு அவர்களைக் காத்தருளினான். அந்தச் சிவபிரான், அழகிய மலை போன்ற மதில்களால் சூழப்பெற்ற மறைவனத்தில் (திருமறைக்காட்டில்) எழுந்தருளிய பரமன் ஆவான்.