1
சொற்பிரிப்பு
உரை
விண், தீ, காற்று, நீர், மண் ஆகிய ஐம்பூதங்களைப் பற்றியும், அறுபத்து நான்கு கலைகளைப் பற்றியும் வேதங்கள் விரித்துக் கூறுகின்றன. சத்துவம், இராஜசம், தாமசம் ஆகியவை மூன்று குணங்கள். தாசமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் ஆகியவை விரும்பத்தக்க மார்க்கங்கள் (அல்லது) சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவை விரும்பத்தக்க மார்க்கங்கள். தேவர் முதலாகத் தாவரம் ஈறாக உள்ள அனைத்து உயிர்களுக்கும், அவைகளுடைய வினைக்கு ஈடாகப் பிறவிகள் அருளப்படுகின்றன. படைக்கும் தொழிலில் நல்ல தாமரை மலரில் விளங்கும் நான்முகனை இடமாகக் கொண்டு அதிட்டித்து) நின்று சிவபெருமான் உலகைத் தோற்றுவித்து அருளுகிறான். அந்தச் சிவபெருமானுடைய சிவபுரத் தலத்தை நினைப்பவர்கள் வளம் நிறைந்த இந்த உலகில் நிலைபெற்று வாழ்வார்கள்.