1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் தனது விரிந்த ஒரு சடையில் பிறையைக் கொண்டுள்ளான். ஒன்பது சடைகளில் மற்றொன்றில் பெருகி வந்த கங்கையையும் உடையவன் அவனே. தனது முன் கைகளில் அழகிய வளையல்களை அணிந்த உமையம்மையின் இரண்டு தனங்களோடு இணைபவனும் அவனே. அவன் திருக்கழுமலத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்புரிந்து வருகின்றான். திருக்கழுமலம் அழகிய பல ஊர்களில் ஒன்றாக விளங்குகின்றது. நிழல்மிக்க மரங்களை உடைய சோலைகளை உடையது. நெல் வயல்கள் இந்த ஊரை அணி செய்கின்றன. சிவபெருமான் அழல் போன்ற சிவந்த திருமேனியன். அவனுடைய அழகிய திருவடிகளில் தேன் நிறைந்த மலர்களினின்று தேன் மணமும், மலர்களின் நறுமணமும் பரந்து நல்ல வாசத்தை வீசிக் கொண்டே இருக்கின்றன. உலகீர்! சிவபெருமானுடைய திருவடிகளைத் தொழுதல் செய்து உய்மின்கள். சிறு விளக்கம்: பரஞானம், அபரஞானம் என்ற உயர்ந்த இரு மெய்ஞ்ஞானங்களாக விளங்குபவன் சிவபெருமான். அவைகளோடு இணைந்து அவைகளுக்குத் தலைவனாகவும் விளங்குபவனும் அவனே. கண்ணால் காண முடியாத இந்த மெய்ஞ்ஞானங்களைக் குறியீடு மூலமாக விளக்குவதற்கு நம் முன்னோர்கள், பராசக்தியாகிய பார்வதி தேவியின் இருதனங்களை ஒப்புமையாக வைத்துள்ளார்கள். இத்தத்துவத்தை உள்ளத்தில் கொண்டு ஆங்காங்கே வரும் பாடல்களுக்கு இந்த மெய்ப் பொருளை உணர்ந்து கொள்க.