1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் குன்றளூர் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார். வளம் மிக்க குன்றளூர் இடும்பன் என்னும் அரக்கனுக்குரியது. இடும்பன் சினம் மிக்க வலிய ஒளி பொருந்திய பற்களை உடையவன். கூட்டமாகிய முனிவர் குழாங்கள் இங்குள்ள சிவபெருமானை வணங்குகிறார்கள். சிவபெருமானுக்குரிய இடம் இடும்பாவனமும் ஆகும். இங்குள்ள சிவபெருமானை மகழ்ச்சி மிக்க இளைஞர்கள், தங்கள் மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மலர் தூவி வழிபாடு செய்கிறார்கள். இறைவன், அவர்கள் பொருட்செல்வம் பெற்றுய்வதற்கு அருள் புரிகின்றான். இங்கு, சங்குகளை உடைய கடலில் கப்பல்கள் வந்து கொண்டிருக்கும். அக்கப்பல்களைக் கடல் அலைகள் உந்தி வந்து கரை சேர்க்கின்றன.