1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் கருநிறம் அமைந்த கண்டத்தை உடையவன். மலை மகளாகிய பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவன். துதிக்கையோடு கூடியதாய்த் தன்னை எதிர்த்து வந்த அழிவற்ற புகழ் பெற்ற யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த தன்னொப்பார் இல்லாத் தலைவன். வயல்களில் முளைத்த குவளை மலர்போலும் கண்களை உடைய உமையம்மையோடும் நெய்யாடிய பெருமான் என்ற திருப்பெயரோடும் விளங்கும் இடமாகிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைச் சொல்வீராக