1
சொற்பிரிப்பு
உரை
குரா மலரின் மணம் கமழ்வதும், இயற்கையிலேயே மணம் உடையதுமான மென்மையான கூந்தலை உடைய உமையம்மை, அஞ்சும்படியாகச் சிவபெருமான் தன்னோடு பொருதற்கு வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்துத் தன் திருமேனியில் போர்த்துக் கொண்டான். அலன் சடையில் பாம்பு, கங்கை, சந்திரன், வெண்தலை ஓடு ஆகியவற்றை அணிந்துள்ளான். அவனுக்கு உரிய இடம் நீர்வளம் மிக்க வியலூர் ஆகும்.