1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் தன் சடைமுடியில் கங்கையைத் தரித்தவன். இடையினின்று சரிந்து தழுவும் ஒப்பற்ற கோவண ஆடையை அணிந்தவன். மழுப்படையை உடையவன். பலவகையான பூதங்களைப் படையாகக் கொண்டவன். மடமைத் தன்மை பொருந்திய மான்விழி போன்ற விழிகளை உடைய உமையம்மையாகிய பெண்ணை இடப்பாகத்தில் கொண்டவன். அவன் என்னை ஆளாக உடையவன். அவன் விடைக்கொடி உடையவன். அவன் எழுந்தருளிய இடம் திருவீழிமிழலை.