1
சொற்பிரிப்பு
உரை
நமது முழுமுதற் பொருளாகிய சிவபெருமான், உண்ணாமுலை என்னும் தருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவர். தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாடகியவர். அவரது மலை திருஅண்ணாமலை. இம்மலையில் இருந்து அருவிகள், சுடர்விடுகன்ற மணிகளைத் தாங்கிக் கொண்டு பேரிரைச்சலோடு மண்ணை நோக்கி வருகின்றன. சிறார்கள் பேசும் பொருள் புரியாத மழலை ஒலியோடு, முழவு ஒலியும் சேர்ந்து ஒலிக்கின்ற ஒலி போல அமைகின்றது அந்த அருவியின் பேரிரைச்சல். இத்தனை சிறப்பு வாய்ந்த திருஅண்ணாமலையைத் தொழுவார்களுடைய வினைகள் தவறாது கெடும்.