1
சொற்பிரிப்பு
உரை
வயலின்கண் நீர் பாய, அதனால் களித்த செங்கயல் மீன்கள் துள்ள, துள்ளிய மீன்கள், வயலின்மீது தொங்கிக் கொண்டு இருந்த பூங்கொம்புகள்மீது உரச, அதனால் சில மலர்களில் இருந்து தேன் வடிந்து கொண்டிருக்கின்றது. கைக்கெட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளை ஈன்று பழங்கள் வெடித்து முதிர்ந்துள்ளன. இதனால் காடெல்லாம் தேன் மணமும் வாழைப்பழ மணமும் திருக்காட்டுப் பள்ளியுள் கமழ்ந்து கொண்டு இருந்தன. நச்சுப்பையினருகே அழலும் தன்மை உடைய ஐந்து வாயை உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட திருமாலையும், உமையம்மையையும் பாகமாகக் கொண்டு (அரியர்த்தர், அர்த்தநாரீசுரம்) விளங்கும் இறைவன்மீது பற்றுக் கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர், வீட்டுலகை அடைவர்.