1
சொற்பிரிப்பு
உரை
கற்றையாகச் செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும், ஒளி சேர்ந்த நுதலையும், மான்விழி போன்ற விழியையும் உடைய உமையம்மையோடு, பொய்ப் பொருளை உயர்த்திப் பேசாத நான்மறையைப் பேசும் அந்தணர்கள் ஏத்தப் புகலியில் விளங்கும் புண்ணியம் 'இரண்டனைய வடிவினனே, எம் தலைவனே! இமையாத முக்கண்களை உடைய எம் ஈசனே! என்பால் அன்பு உடையவனே! வாய்மையே பேசும் நான்மறையை ஓதிய அந்தணர் வாழும் திருவீழிமிழலையில் திருமாலால் விண்ணிலிருந்து கொண்டு வந்து நிறுவப்பட்ட கோயிலில் விரும்பியுறைதற்குரிய காரணம் என்னையோ? சொல்வாயாக!