1
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்துபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகலப்பொன்னின்செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள்புரிந்துபின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.