திருமுறை 7 · 7.001 · 10

திருவெண்ணெய்நல்லூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
இந்தளம்
தலம்
வெண்ணெய்நல்லூர்
நாடு
நடுநாடு

1

பித்தாபிறை சூடீபெரு மானே அருளாளாஎத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைவைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
சொற்பிரிப்பு
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!எத்தால்‌ மறவாதே நினைக்கின்றேன்‌? மனத்து உன்னைவைத்தாய்‌; பெண்ணைத்‌ தென்பால் ‌ வெண்ணெய்நல்லூர்‌ அருள்‌-துறையுள்‌அத்தா! உனக்கு ஆளாய்‌ இனி அல்லேன்‌ எனல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்ஆயாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
சொற்பிரிப்பு
நாயேன்‌ பலநாளும்‌ நினைப்பு இன்றி, மனத்து உன்னை,பேயாய்த்‌ திரிந்து எய்த்தேன்‌; பெறல்‌ ஆகா அருள்‌ பெற்றேன்‌;வேய்‌ ஆர்‌ பெண்ணைத்‌ தென்பால்‌ வெண்ணெய்‌ நல்லூர்‌ அருள்‌-துறையுள்‌ஆயா! உனக்கு ஆளாய்‌ இனி அல்லேன்‌ எனல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்திமின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்அன்னேஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
சொற்பிரிப்பு
மன்னே! மறவாதே நினைக்கின்றேன்‌, மனத்து உன்னை;பொன்னே, மணிதானே, வயிர(ம்‌)மே, பொருது உந்திமின்‌ ஆர்‌ பெண்ணைத்‌ தென்பால் ‌ வெண்ணெய்‌ நல்லூர்‌ அருள்‌-துறையுள்‌அன்னே! உனக்கு ஆளாய் ‌ இனி அல்லேன்‌ எனல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீகொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீசெடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்அடிகேளுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
சொற்பிரிப்பு
முடியேன்‌; இனிப்‌ பிறவேன்‌; பெறின்‌ மூவேன்‌; பெற்றம்‌ ஊர்தீ!கொடியேன்‌ பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்‌, நீ!செடி ஆர்‌ பெண்ணைத்‌ தென்பால்‌ வெண்ணெய்நல்லூர்‌ அருள்‌-துறையுள்‌அடிகேள்‌! உனக்கு ஆளாய்‌ இனி அல்லேன்‌ எனல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பாதம்பணி வார்கள்பெறும் பண்டம்மது பணியாய்ஆதன்பொருள் ஆனேன்அறி வில்லேன் அருளாளாதாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்ஆதீஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
சொற்பிரிப்பு
பாதம்‌ பணிவார்கள்‌ பெறும்‌ பண்டம்‌ அது பணியாய்‌!ஆதன்‌ பொருள்‌ ஆனேன்‌; அறிவு இல்லேன்‌; அருளாளா!தாது ஆர்‌ பெண்ணைத்‌ தென்பால்‌ வெண்ணெய்நல்லூர்‌ அருள்‌-துறையுள்‌ ஆதீ! உனக்கு ஆளாய்‌ இனி அல்லேன்‌ எனல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தண்ணார்மதி சூடீதழல் போலும்திரு மேனீஎண்ணார்புரம் மூன்றும்எரி உண்ணநகை செய்தாய்மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்அண்ணாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
சொற்பிரிப்பு
தண்‌ ஆர்‌ மதிசூடீ! தழல்‌ போலும்‌ திருமேனீ !எண்ணார்‌ புரம் மூன்றும்‌ எரியுண்ண நகைசெய்தாய்‌!மண்‌ ஆர்‌ பெண்ணைத்‌ தென்பால்‌ வெண்ணெய்‌ நல்லூர்‌ அருள்‌-துறையுள்‌ ‌அண்ணா! உனக்கு ஆளாய்‌ இனி அல்லேன்‌ எனல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்ஆனாய்உனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
சொற்பிரிப்பு
ஊனாய்‌, உயிர்‌ ஆனாய்‌; உடல்‌ ஆனாய்‌; உலகு ஆனாய்‌;வானாய்‌, நிலன்‌ ஆனாய்‌; கடல்‌ ஆனாய்‌; மலை ஆனாய்‌ ;தேன்‌ ஆர்‌ பெண்ணைத்‌ தென்பால்‌ வெண்ணெய்நல்லூர்‌ அருள்‌-துறையுள்‌ஆனாய்‌! உனக்கு ஆளாய்‌ இனி அல்லேன்‌ எனல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
சொற்பிரிப்பு
ஏற்றார்‌ புரம் மூன்றும்‌ எரியுண்ணச் ‌ சிலை தொட்டாய்‌!தேற்றாதன சொல்லித்‌ திரிவேனோ? செக்கர் வான்‌ நீர்‌ஏற்றாய்‌! பெண்ணைத்‌ தென்பால்‌ வெண்ணெய்நல்லூர்‌ அருள்‌-துறையுள்‌ஆற்றாய்‌! உனக்கு ஆளாய்‌ இனி அல்லேன்‌ எனல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்காதொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலேசெழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்அழகாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
சொற்பிரிப்பு
மழுவாள்‌ வலன்‌ ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா!தொழுவார்‌அவர்‌ துயர் ‌ஆயின தீர்த்தல்‌ உன தொழிலே;செழுவார்‌ பெண்ணைத்‌ தென்பால்‌ வெண்ணெய்‌ நல்லூர்‌ அருள்‌-துறையுள்‌அழகா! உனக்கு ஆளாய்‌ இனி அல்லேன்‌ எனல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையால்பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்எனல் ஆமே.
சொற்பிரிப்பு
கார்‌ ஊர்‌ புனல்‌ எய்தி, கரை கல்லித்‌ திரைக்கையால்‌பார்‌ ஊர்‌ புகழ்‌ எய்தி, திகழ்‌ பல்‌ மா மணி உந்தி,சீர்‌ ஊர்‌ பெண்ணைத்‌ தென்பால்‌ வெண்ணெய்நல்லூர்‌ அருள்‌-துறையுள்‌ஆரூரன்‌ எம்பெருமாற்கு ஆள்‌ அல்லேன்‌ எனல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.