1
அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானைஅருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்றபெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
சொற்பிரிப்பு
அரியானை, அந்தணர் தம் சிந்தையானை, அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்தெரியாத தத்துவனைத், தேனைப், பாலைத், திகழ் ஒளியைத், தேவர்கள் தம் கோனை, மற்றைக்கரியானை, நான்முகனைக், கனலைக், காற்றைக், கனைகடலைக், குலவரையைக், கலந்து நின்றபெரியானைப், பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.