திருமுறை 5 · 5.100 · 10

ஆதிபுராணத்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பொது
நாடு
பொது

1

வேத நாயகன் வேதியர் நாயகன்மாதின் நாயகன் மாதவர் நாயகன்ஆதி நாயகன் ஆதிரை நாயகன்பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
சொற்பிரிப்பு
வேத நாயகன் வேதியர் நாயகன்;மாதின் நாயகன் மாதவர் நாயகன்;ஆதி நாயகன் ஆதிரை நாயகன்;பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்றுபத்தி செய்மனப் பாறைகட் கேறுமோஅத்த னென்றரி யோடு பிரமனுந்துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.
சொற்பிரிப்பு
செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்றுபத்தி செய் மனப் பாறைகட்கு ஏறுமோ,அத்தன் என்று அரியோடு பிரமனும்துத்தியம் செய நின்ற நல் சோதியே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்ஆறு கோடி நாராயண ரங்ஙனேஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.
சொற்பிரிப்பு
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;ஆறு கோடி நாராயணர் அங்ஙனே;ஏறு கங்கை மணல், எண்ணில் இந்திரர்;ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வாது செய்து மயங்கு மனத்தராய்ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்யாதோர் தேவ ரெனப்படு வார்க் கெல்லாம்மாதே வன்னலாற் றேவர்மற் றில்லையே.
சொற்பிரிப்பு
வாது செய்து மயங்கும் மனத்தராய்ஏது சொல்லுவீர் ஆகிலும், ஏழைகாள்!யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எல்லாம்மாதேவன் அலால் தேவர் மற்று இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கூவ லாமை குரைகட லாமையைக்கூவ லோடொக்கு மோகட லென்றல்போற்பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற்தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
சொற்பிரிப்பு
கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்,கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல்,பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்,தேவ தேவன் சிவன் பெருந்தன்மையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பேய்வ னத்தமர் வானைப்பி ரார்த்தித்தார்க்கீவ னையிமை யோர்முடி தன்னடிச்சாய்வ னைச்சல வார்கள் தமக்குடற்சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.
சொற்பிரிப்பு
பேய் வனத்து அமர்வானைப்; பிரார்த்தித்தார்க்குஈவனை; இமையோர் முடி தன் அடிச்சாய்வனைச்; சலவார்கள் தமக்கு உடல்சீவனைச், சிவனைச், சிந்தியார்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசனதுருவ ருக்கம தாவ துணர்கிலார்அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்நரிவி ருத்தம தாகுவர் நாடரே
சொற்பிரிப்பு
எரி பெருக்குவர் அவ்எரி ஈசனதுஉரு வருக்கம் அது ஆவது உணர்கிலார்;அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய்நரி விருத்தம் அது ஆகுவர், நாடரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்அருக்க னாவான் அரனுரு வல்லனோஇருக்கு நான்மறை ஈசனை யேதொழுங்கருத்தி னைநினை யார்கன் மனவரே.
சொற்பிரிப்பு
அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்;அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ?இருக்கு நான்மறை ஈசனையே தொழும்கருத்தினை நினையார், கல் மனவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர்ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார்பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கியமாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
சொற்பிரிப்பு
தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்ஆய உள்ளத்து அமுது அருந்தப்பெறார்பேயர், பேய்முலை உண்டு உயிர் போக்கியமாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள்பெருக்கச் செய்த பிரான்பெருந் தன்மையைஅருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.
சொற்பிரிப்பு
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள்பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையைஅருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்கருத்து இலாக் கயவக் கணத்தோர்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.