1
கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
சொற்பிரிப்பு
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்;ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட,ஆற்றேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.