1
மானின்நேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்பானல்வாயொரு பாலனீங்கிவன் என்றுநீபரி வெய்திடேல்ஆனைமாமலை ஆதியாய இடங்களிற்பல அல்லல்சேர்ஈனர்கட்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
சொற்பிரிப்பு
மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்“பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்!ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்ஈனர்கட்கு எளியேன் அலேன்—திரு ஆலவாய் அரன்நிற்கவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.