1
சொற்பிரிப்பு
உரை
திருப்பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் செந்நெல் விளையும் அழகிய வயல்கள் எங்கும் உள்ளன. வயல்களின் அருகே புன்னை மரச் சோலைகள் உள்ளன. அம்மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள், வெண்மையான துணியில் பவளங்கள் பரப்பினாற்போலக் காட்சி அளிக்கின்றன. இவ்வாறு விளங்கும் திருப்பூந்தராய்ப் பதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் திருவடிகளை, நல்ல தேவர்கள் நெருங்கி வந்து தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்பெறும் திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம்பிறையையும், அதற்குப் பகையாக உள்ள பாம்பையும் சேர்த்து வைத்துள்ளது ஏனோ? சொல்லுவீராக