1
மூலமான திருத்தொண்டத் தொகைக்கு முதல்வராய் இந்தஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தம்பிரான் தோழர்காலை மலர்ச் செங்கமலக்கண் கழறிற்று அறிவாருடன் கூடஆலம் உண்டார் திருக் கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம்.
சொற்பிரிப்பு
மூலம் ஆன திருத்தொண்டத் தொகைக்கு முதல்வராய் இந்தஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி, தம்பிரான் தோழர்,காலை மலர்ச் செங்கமலக் கண் கழறிற்று அறிவார் உடன் கூடஆலம் உண்டார் திருக்கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கிவடிவு நம்பி ஆரூரர் செம் பொன் மேனி வனப்பாகக்கடிய வெய்ய இருவினையின் களை கட்டெழுந்து கதிர் பரப்பிமுடிவு இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்ததால்.
சொற்பிரிப்பு
படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கிவடிவு நம்பி ஆரூரர் செம்பொன் மேனி வனப்பு ஆகக்கடிய வெய்ய இருவினையின் களை கட்டு எழுந்து கதிர் பரப்பிமுடிவு இலாத சிவபோகம் முதிர்ந்து முறுகி விளைந்ததால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
ஆரம் உரகம் அணிந்தபிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர்ஈர மதுவார் மலர்ச்சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள்சேரர் பெருமாள் தனை நினைந்து தெய்வப் பெருமாள் கழல் வணங்கிச்சாரல் மலைநாடு அணைவதற்குத் தவிரா விருப்பினுடன் போந்தார்.
சொற்பிரிப்பு
ஆரம் உரகம் அணிந்த பிரான் அன்பர் அணுக்க வன்தொண்டர்ஈர மதுவார் மலர்ச்சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள்சேரர் பெருமாள் தனை நினைந்து தெய்வப் பெருமான் கழல் வணங்கிச்சாரல் மலைநாடு அணைவதற்குத் தவிரா விருப்பின் உடன் போந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
நன்னீர்ப் பொன்னித் திரு நாட்டு நாதர் மகிழும் திருப்பதிகள்முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லைப் படப்பைக்கு ஒல்லைமான்துன்னி உகைக்கும் குடக் கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர்சென்னி மிசை வைத்தவர் செல்வத் திருப்புக்கொளியூர் சென்று அடைந்தார்.
சொற்பிரிப்பு
நன்னீர்ப் பொன்னித் திருநாட்டு நாதர் மகிழும் திருப்பதிகள்முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லைப் படப்பைக் கொல்லை மான்துன்னி உகைக்கும் குடக் கொங்கில் அணைந்து, தூய மதி, வான் நீர்சென்னிமிசை வைத்தவர் செல்வத் திருப்புக்கொளியூர் சென்றடைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
மறையோர் வாழும் அப்பதியின் மாட வீதி மருங்கு அணைவார்நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள்அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றினில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்குஉறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார்.
சொற்பிரிப்பு
மறையோர் வாழும் அப்பதியின் மாட வீதி மருங்கு அணைவார்நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில், நிகழ் மங்கல இயங்கள்அறையும் ஒலி ஒன்றினில், ஒன்றில் அழுகை ஒலி, வந்து எழுதலும் ஆங்குஉறையும் மறையோர்களை “இரண்டும் உடனே நிகழ்வது என்?” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டுவந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவைமுந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம்இந்த மனை மற்று அந்தமனை இழந்தார் அழுகை என்று உரைத்தார்.
சொற்பிரிப்பு
அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டுவந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவைமுந்த விழுங்கப், பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம்இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
இத்தன்மையினைக் கேட்டருளி இரங்கும் திருவுள்ளத்தினராம்மொய்த்த முகைத்தார் வன்தொண்டர் தம்மை முன்னே கண்டு இறைஞ்சவைத்த சிந்தை மறையோனும் மனைவிதானும் மகவிழந்தசித்த சோகம் தெரியாமே வந்து திருந்தாள் இறைஞ்சினார்.
சொற்பிரிப்பு
இத்தன்மையினைக் கேட்டு அருளி இரங்கும் திருஉள்ளத்தினராம்மொய்த்த முகைத்தார் வன் தொண்டர் தம்மை முன்னே கண்டு இறைஞ்சவைத்த சிந்தை மறையோனும் மனைவிதானும் மகவு இழந்தசித்த சோகம் தெரியாமே வந்து திருத்தாள் இறைஞ்சினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார் தம்மை முகம் நோக்கிஇன்ப மைந்தன் தனை இழந்தீர் நீரோ என்ன எதிர் வணங்கிமுன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல் கின்றோம்அன்பு பழுது ஆகாமல் எழுந்தருளப் பெற்றோம் எனத் தொழுதார்.
சொற்பிரிப்பு
துன்பம் அகல முக மலர்ந்து தொழுவார் தம்மை முக நோக்கி“இன்ப மைந்தன் தனை இழந்தீர் நீரோ?” என்ன, எதிர் வணங்கி“முன்பு புகுந்து போனது அது; முன்னே வணங்க முயல்கின்றோம்;அன்பு பழுது ஆகாமல் எழுந்தருளப் பெற்றோம்” எனத் தொழுதார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
மைந்தன் தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்ததற்கேசிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி தானும் சிறுவனையான்அந்த முதலையின் வாய் நின்றும் அழைத்துக் கொடுத்தே அவிநாசிஎந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார்.
சொற்பிரிப்பு
“மைந்தன் தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்ததற்கேசிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி தானும், சிறுவனை யான்அந்த முதலை வாய் நின்றும் அழைத்துக் கொடுத்தே, அவிநாசிஎந்தை பெருமான் கழல் பணிவேன்” என்றார்; சென்றார்; இடர் களைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
இவ்வாறு அருளிச் செய்தருளி இவர்கள் புதல்வன் தனைக் கொடியவெவ்வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவிக் கேட்டுஅவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர்வைவாள் எயிற்று முதலை கொடு வருதற்கு எடுத்தார் திருப்பதிகம்.
சொற்பிரிப்பு
இவ்வாறு அருளிச் செய்தருளி “இவர்கள் புதல்வன் தனைக் கொடியவெவ்வாய் முதலை விழுங்கு மடு எங்கே?” என்று வினவிக் கேட்டுஅவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர்வைவாள் எயிற்று முதலை கொடு வருவதற்கு எடுத்தார் திருப்பதிகம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியாமுன் உயர்ந்தவரைப் பான்மையில் நீள் தடம்புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்துதிரைப்பாய் புனலின் முதலைவயிற்று உடலில்சென்ற ஆண்டுகளும்தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான்.
சொற்பிரிப்பு
“உரைப்பார் உரை” என்று எடுத்த திருப்பாட்டு முடியா முன், உயர்ந்தவரைப் பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்துதிரைப் பாய் புனலின் முதலை வயிற்று, உடலில் சென்ற ஆண்டுகளும்தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப, முதலை வாயில் தருவித்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
பெருவாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளைதனைஉருகா நின்ற தாய் ஓடி எடுத்துக் கொடுவந்து உயிர் அளித்ததிருவாளன் தன் சேவடிக்கீழ்ச் சீலமறையோனொடு வீழ்ந்தாள்மருவார் தருவின் மலர் மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள்.
சொற்பிரிப்பு
பெருவாய் முதலை கரையின்கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளை தனைஉருகாநின்ற தாய் ஒடி எடுத்துக் கொடுவந்து, உயிர் அளித்ததிருவாளன் தன் சேவடிக் கீழ்ச் சீல மறையோனொடு வீழ்ந்தாள்மருவார் தருவின் மலர்மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
மண்ணினுள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம்விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்ததுஅண்ணலாரும் அவிநாசி அரனார் தம்மை அருமறையோன்கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினிமேல்.
சொற்பிரிப்பு
மண்ணின் உள்ளார் அதிசயித்தார்; மறையோர் எல்லாம் உத்தரியம்விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார்; வேத நாதம் மிக்கு எழுந்தது;அண்ணலாரும் அவிநாசி அரனார் தம்மை, அருமறையோன்கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினி மேல்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடிப் பணிந்து போந்து அன்புவிரவு மறையோன் காதலனை வெண்ணூல் பூட்டி அண்ணலார்முரசம் இயம்பக் கலியாணம் முடித்து முடிச் சேரலர் தம்பால்குரவ மலர்ப் பூந்தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார்.
சொற்பிரிப்பு
பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடிப் பணிந்து போந்து, அன்புவிரவு மறையோன் காதலனை வெண்நூல் பூட்டி, அண்ணலார்முரசம் இயம்பக் கலியாணம் முடித்து, முடிச் சேரலர் தம்பால்குரவ மலர்ப் பூந்தண் சோலை குலவு மலைநாடு அணைகின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
சென்ற சென்ற குட புலத்துச் சிவனார் அடியார் பதிகள் தொறும்நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானகமும்துன்று மணிநீர்க் கான் ஆறும் உறு கல் சுரமும் கடந்தருளிக்குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம்புகுந்தார்.
சொற்பிரிப்பு
சென்ற சென்ற குட புலத்துச் சிவனார் அடியார் பதிகள்தொறும்நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானகமும்துன்று மணிநீர்க் கான் யாறும் துறு கற்சுரமும் கடந்தருளிக்குன்ற வளநாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
முன்னாள் முதலை வாய்புக்க மைந்தன் முன்போல் வரமீட்டுத்தென்னாரூரர் எழுந்து அருளா நின்றார் என்று சேரர் பிரார்க்குஅந்நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்பப்பொன்னார் கிழியும் மணிப்பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார்.
சொற்பிரிப்பு
“முன் நாள் முதலை வாய்ப் புக்க மைந்தன் முன் போல் வர மீட்டுத்தென் ஆரூரர் எழுந்தருளா நின்றார்” என்று சேரர் பிரார்க்குஅந்நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்பப்பொன் ஆர் கிழியும் மணிப்பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களி கூர்ந்து என்ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில்சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம்உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்று வித்தார்.
சொற்பிரிப்பு
செய்வது ஒன்றும் அறியாது, சிந்தை மகிழ்ந்து, களி கூர்ந்து ”என்ஐயன் அணைந்தான்; எனை ஆளும் அண்ணல் அணைந்தான்; ஆரூரில்சைவன் அணைந்தான்; என் துணையாம் தலைவன் அணைந்தான்; தரணி எலாம்உய்ய அணைந்தான்; அணைந்தான்” என்று ஓகை முரசம் சாற்றுவித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்துப் பெரியோர் எழுந்தருளப்பொருவில் நகரம் அலங்கரித்துப் பண்ணிப் பயணம் புறப்படுவித்துஅருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெருந்தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார்.
சொற்பிரிப்பு
பெருகு மதி நூல் அமைச்சர்களை அழைத்துப் பெரியோர் எழுந்தருளப்பொரு இல் நகரம் அலங்கரித்துப் பண்ணிப் பயணம் புறப்படுவித்துஅருவி மதமால் யானையினை அணைந்து, மிசை கொண்டு, அரசர் பெரும்தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
மலை நாட்டு எல்லை உள் புகுது வந்த வன் தொண்டரை வரையில்சிலை நாட்டிய வெல் கொடித்தானைச் சேரர் பெருமான் எதிர் சென்றுதலை நாள் கமலப் போது அனைய சரணம் பணியத் தாவில் பலகலை நாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனரால்.
சொற்பிரிப்பு
மலைநாட்டு எல்லை உள் புகுத வந்த வன்தொண்டரை, வரையில்சிலை நாட்டிய வெல் கொடித் தானைச் சேரர் பெருமான் எதிர் சென்றுதலைநாள் கமலப் போது அனைய சரணம் பணியத் தாவில் பலகலைநாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனரால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள்தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய்முந்த எழும் காதலில் தொழுது முயங்கி உதியர் முதல் வேந்தர்எந்தை பெருமான் திருவாரூர்ச் செல்வம் வினவி இன்புற்றார்.
சொற்பிரிப்பு
சிந்தை மகிழும் சேரலனார், திருஆரூரர் எனும் இவர்கள்தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய்முந்த எழும் காதலில் தொழுது முயங்கி உதியர் முதல்வேந்தர்எந்தை பெருமான் திருஆரூர்ச் செல்வம் வினவி இன்புற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல்இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும்பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளைவருகை வரையின் மிசை ஏற்றித் தாம் பின் மதிவெண் குடை கவித்தார்.
சொற்பிரிப்பு
ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி, உயர் காதல்இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும்பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார்; பெருமாள், தமிழின் பெருமாளைவருகை வரையின் மிசை ஏற்றித் தாம் பின் மதி வெண்குடை கவித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
உதியர் பெருமாள் பெருஞ் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்பகதிர் வெண் திரு நீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்பஎதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளித் துகள் ஆர்ப்பமதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணிவாயிலை அணைந்தார்.
சொற்பிரிப்பு
உதியர் பெருமாள் பெரும்சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்பக்கதிர்வெண் திருநீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்பஎதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளித் துகள் ஆர்ப்பமதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணிவாயிலை அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர்வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கினபூரண கலசம் மலிந்தன பூ மழை மகளிர் பொழிந்திடுதோரண மறுகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம்.
சொற்பிரிப்பு
ஆரண மொழிகள் முழங்கிட, ஆடினர் குணலைகள் அந்தணர்;வாரண மதமழை சிந்தின; வாசிகள் கிளர்ஒளி பொங்கின;பூரண கலசம் மலிந்தன; பூ மழை மகளிர் பொழிந்திடும்தோரண மறுகு புகுந்தது, தோழர்கள் நடவிய குஞ்சரம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிரடி தங்கியபரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தனசுரிவனை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணிவிரிதரு பவன நெடும் கடை விறல் மத கரியின் இழிந்தனர்.
சொற்பிரிப்பு
அரிவையர் தெருவில் நடம் பயில் அணிகிளர் தளிர் அடி தங்கியபரி புர ஒலிகள் கிளர்ந்தன; பணை முரசு ஒலிகள் பரந்தன;சுரிவளை நிரைகள் முரன்றன; துணைவர்கள் இருவரும் வந்து அணிவிரிதரு பவன நெடும் கடை விறல் மத கரியின் இழிந்தனர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
தூ நறு மலர் தரளம் பொரிதூவி முன் இரு புடையின் கணும்நான் மறை முனிவர்கள் மங்கல நாம நன்மொழிகள் விளம்பிடமேல் நிறை நிழல் செய வெண் குடை வீசிய கவரி மருங்குறவானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர்.
சொற்பிரிப்பு
தூநறு மலர், தரளம்,பொரி தூவி முன் இருபுடையின் கணும்நான்மறை முனிவர்கள் மங்கல நாம நன் மொழிகள் விளம்பிடமேல்நிறை நிழல்செய வெண்குடை, வீசிய கவரி மருங்குறவானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
அரியணை அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியைவரிமலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின்உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவில என முன் செய்துபரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர்.
சொற்பிரிப்பு
அரி அணை அதனில் விளங்கிட அடல் மழவிடை என நம்பியைவரிமலர் அமளி அமர்ந்திட, மலையர்கள் தலைவர் பணிந்து, பின்உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு இல என முன் செய்துபரிசனம் மன மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்தாம் இடர்கெட முனைப்பாடிமன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிதுறையும் நாள்மலை நெடு நாட்டெங்கும்பன்னகம் புனை பரமர் தம் திருப்பதி பலவுடன் பணிந்து ஏத்திப்பொன் நெடும் தட மூதெயில் மகோதையில் புகுந்தனர் வன்தொண்டர்.
சொற்பிரிப்பு
இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர் தாம் இடர்கெட முனைப்பாடிமன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாட்டு எங்கும்பன்னகம் புனை பரமர் தம் திருப்பதி பல உடன் பணிந்து ஏத்திப்பொன் நெடும் தட மூது எயில்மகோதையில் புகுந்தனர் வன்தொண்டர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
ஆய செய்கையில் நாள் பல கழிந்தபின் அரசர்கள் முதல் சேரர்தூய மஞ்சனத் தொழிலினில் தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்பாய கங்கை சூழ் நெடும் சடைப் பரமரைப் பண்டுதாம் பிரிந்து எய்தும்சேய நன்னெறி குறுகிடக் குறுகினார் திருவஞ்சைக் களம் தன்னில்.
சொற்பிரிப்பு
ஆய செய்கையில் நாள் பல கழிந்த பின் அரசர்கள் முதல் சேரர்தூய மஞ்சனத் தொழிலினின்தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்பாய கங்கை சூழ் நெடும் சடைப்பரமரைப் பண்டு தாம் பிரிந்து எய்தும்சேய நன்நெறி குறுகிடக் குறுகினார் திரு அஞ்சைக்களம் தன்னில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
கரிய கண்டர் தம் கோயிலை வலம் கொண்டு காதலால் பெருகு அன்புபுரியும் உள்ளத்தர் உள்ளணைந்து இறைவர் தம் பூங் கழலிணை போற்றிஅரிய செய்கையில் அவனியில் விழுந்தெழுந்து அலைப்புறு மனை வாழ்க்கைசரியவே தலைக்குத் தலை மாலை என்று எடுத்தனர் தமிழ் மாலை.
சொற்பிரிப்பு
கரிய கண்டர் தம் கோயிலை வலம் கொண்டு காதலால் பெருகு அன்புபுரியும் உள்ளத்தர் உள் அணைந்து இறைவர் தம் பூங்கழல் இணை போற்றிஅரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கைசரியவே, ”தலைக்குத் தலை மாலை” என்று எடுத்தனர் தமிழ்மாலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
எடுத்த அத்திருப் பதிகத்தின் உட் குறிப்பு இவ்வுலகினில் பாசம்அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று அன்பர் அன்பினில் பாடக்கடுத்த தும்பிய கண்டர் தம் கயிலையில் கணத்தவருடன் கூடத்தடுத்த செய்கைதான் முடிந்திடத் தங்கழல் சார்பு தந்து அளிக்கின்றார்.
சொற்பிரிப்பு
எடுத்த அத்திருப் பதிகத்தின் உள் குறிப்பு “இவ்உலகினில் பாசம்அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும்” என்று அன்பர் அன்பினில் பாடக்கடுத் ததும்பிய கண்டர் தம் கயிலையில் கணத்தவருடன் கூடத்தடுத்த செய்கை தான் முடிந்திடத் தம் கழல் சார்பு தந்து அளிக்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
மன்றலந் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை வல்லியுடன் கூடவென்றி வெள்விடைப் பாகர் தாம் வீற்றிருந்தருளிய பொழுதின் கண்ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள்ளானையி னுடன் ஏற்றிச்சென்று கொண்டு இங்கு வாருமென்று அயன் முதல் தேவர்கட்கு அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
மன்றல் அந்தரு மிடைந்த பூம் கயிலையில் மலைவல்லி உடன் கூடவென்றி வெள்விடைப் பாகர் தாம் வீற்றிருந்து அருளிய பொழுதின்கண்“ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் ஆனையின் உடன் ஏற்றிச்சென்று கொண்டு இங்கு வாரும்” என்று அயன் முதல் தேவர்கட்கு அருள்செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடை கொண்டுதூ நலம் திகழ் சோதி வெள்ளானையும் கொண்டு வன் தொண்டர்க்குத்தேன் அலம்பு தண் சோலை சூழ் மாகோதையில் திருவஞ்சைக் களம் சேரக்கானிலங் கொள வலம் கொண்டு மேவினார் கடிமதில் திருவாயில்.
சொற்பிரிப்பு
வான நாடர்கள் அரிஅயன் முதலினோர் வணங்கி முன் விடை கொண்டுதூநலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன்தொண்டர்க்குத்தேனலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருஅஞ்சைக் களம் சேரக்கால் நிலம் கொள வலங்கொண்டு மேவினார் கடிமதில் திருவாயில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
தேவர் தங்குழாம் நெருங்கிய வாய்தலில் திருநாவலூரார் தம்காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்றிருக்கின்றபூவலம்பு தண் புனல் சடை முடியவர் அருளிப்பாடு எனப் போற்றிஏவல் என்றபின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்தெழுந்து எதிரேற்றார்.
சொற்பிரிப்பு
தேவர் தம் குழாம் நெருங்கிய வாய் தனில் திருநாவலூரர் தம்காவல் மன்னரும் புறப்பட, எதிர் கொண்டு, “கயிலை வீற்றிருக்கின்றபூ அலம்பு தண் புனல் சடை முடியவர் அருளிப்பாடு” எனப் போற்றி“ஏவல்” என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
ஏற்ற தொண்டரை அண்டர் வெள்ளானையின் எதிர் வலம் கொண்டு ஏற்றநாற்றடங் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்பப்போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவார் உயிர் எல்லாம்சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார்.
சொற்பிரிப்பு
ஏற்ற தொண்டரை அண்டர் வெள் ஆனையின் எதிர்வலம் கொண்டு ஏற்றநாற்றடம் கடல் முழக்கு என ஐவகைநாதம் மீது எழுந்து ஆர்ப்பப்போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவார் உயிர் எல்லாம்சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடுசார்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
சேரர் தம்பிரான் தோழர் தஞ்செயல் அறிந்து அப்போதேசார நின்றதோர் பரியினை மிசைக் கொண்டு திருவஞ்சைக் களம்சார்வார்வீர வெண் களிறுகைத்து விண்மேல் செலும் மெய்த்தொண்டர் தமைக் கண்டார்பாரில் நின்றிலர் சென்றதம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார்.
சொற்பிரிப்பு
சேரர் தம்பிரான், தம்பிரான் தோழர் தம் செயல் அறிந்து அப்போதேசார நின்றதொர் பரியினை மிசைக் கொண்டு திருஅஞ்சைக் களம் சார்வார்வீர வெண்களிறு உகைத்து விண் மேல் செலும் மெய்த் தொண்டர் தமைக் கண்டார்பாரில் நின்றிலர்; சென்ற தம் மனத்தொடு பரியும் முன் செல விட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
விட்ட வெம்பரிச் செவியினில் புவி முதல் வேந்தர் தாம் விதியாலேஇட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழப் பாய்ந்துமட்டலர்ந்த பைந் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தைமுட்ட எய்தி வலம் கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக.
சொற்பிரிப்பு
விட்ட வெம்பரிச் செவியினில் புவி முதல் வேந்தர் தாம், விதியாலேஇட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழப் பாய்ந்துமட்டலர்ந்த பைந்தெரியல் வன்தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தைமுட்ட எய்தி முன் வலம்கொண்டு சென்றது மற்றதன் முன் ஆக.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
உதியர் மன்னவர் தம் பெருஞ் சேனையின் உடன் சென்ற படைவீரர்கதிகொள் வாசியில் செல்பவர் தம்மைத்தங்கட்புலப்படும் எல்லைஎதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும்முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறை முறை உடல் வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
உதியர் மன்னவர் தம் பெரும் சேனையின் உடன் சென்ற படை வீரர்கதிகொள் வாசியில் செல்பவர்தம்மைத் தம் கண் புலப்படும் எல்லைஎதிர் விசும்பினில் கண்டு, பின் கண்டிலர், ஆதலின் எல்லாரும்முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறைமுறை உடல் வீழ்த்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
வீரயாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானைச்சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனித் தொண்டர்மேல் கொண்டவாரும் மும்மதத்து அருவி வெள்ளானைக்கு வயப் பரி முன் வைத்துச்சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலைத் திசை நோக்கி.
சொற்பிரிப்பு
வீர யாக்கையை மேல்கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானைச்சார முன் சென்று சேவகம் ஏற்றனர்; தனித் தொண்டர் மேல் கொண்டவாரும் மும்மதத்து அருவி வெள்ளானைக்கு வயப்பரி முன் வைத்துச்சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலைத் திசை நோக்கி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும்தானை முன் செலத் தானெனை முன் படைத்தான் எனும் தமிழ் மாலைமானவன் தொண்டர் பாடி முன் அணைந்தனரர் மதி நதி பொதி வேணித்தேன் அலம்பு தண் கொன்றையார் திருமலைத் தென்திசைத் திருவாயில்.
சொற்பிரிப்பு
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும்தானை முன் செலத் “தான் எனை முன் படைத் தான்” எனும் தமிழ் மாலைமான வன்தொண்டர் பாடி முன் அணைந்தனர், மதி நதி பொதி வேணித்தேன் அலம்பு தண் கொன்றையார் திருமலைத் தென் திசைத் திருவாயில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
மாசில் வெண்மை சேர் பேரொளி உலகெலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மைஆசில் அன்பர் தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணிவாயில்தேசுதங்கிய யானையும் புரவியும் இழிந்து சேணிடைச் செல்வார்ஈசர் வெள்ளி மாமலைத் தடம் பல கடந்து எய்தினார் மணிவாயில்.
சொற்பிரிப்பு
மாசில் வெண்மை சேர் பேரொளி உலகெலாம் மலர்ந்திட, வளர் மெய்ம்மைஆசில் அன்பர் தம் சிந்தைபோல் விளங்கிய அணிகிளர் மணிவாயில்தேசு தங்கிய யானையும் புரவியும் இழிந்து சேண் இடைச் செல்வார்ஈசர் வெள்ளி மாமலைத் தடம் பல கடந்து எய்தினர் மணிவாயில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர்தங்கள் காவலர் தடையுண்டு நின்றனர் தம்பிரான் அருளாலேபொங்கு மாமதம் பொழிந்த வெள்ளானையின் உம்பர் போற்றிடப் போந்தநங்கள் நாவலூர்க் காவலர் நண்ணினார் அண்ணலார் திருமுன்பு.
சொற்பிரிப்பு
அங்கண் எய்திய திருஅணுக்கன் திரு வாயிலின். அடல் சேரர்தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர்; தம்பிரான் அருளாலேபொங்கு மாமதம் பொழிந்த வெள் ஆனையின் உம்பர் போற்றிடப் போந்தநங்கள் நாவலூர்க் காவலர் நண்ணினார் அண்ணலார் திருமுன்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
சென்று கண்ணுதல் திருமுன்பு தாழ்ந்து வீழ்ந்தெழுந்து சேணிடை விட்டகன்று கோவினைக் கண்டு அணைந்தது எனக் காதலின் விரைந்து எய்திநின்று போற்றிய தனிப் பெருந் தொண்டரை நேரிழை வலப் பாகத்துஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகுய்ய.
சொற்பிரிப்பு
சென்று கண்நுதல் திருமுன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேணிடை விட்டகன்று கோவினைக் கண்டு அணைந்ததுஎனக் காதலின் விரைந்து எய்திநின்று போற்றிய தனிப் பெரும் தொண்டரை நேர் இழை வலப் பாகத்துஒன்றும் மேனியர் “ஊரனே! வந்தனை” என்றனர் உலகு உய்ய.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டத் தொடக்கினை நீக்கிமுடிவிலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர்ப்படியும் நெஞ்சொடு பன்முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்தவடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர்.
சொற்பிரிப்பு
“அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்ட அத்தொடக்கினை நீக்கிமுடிவு இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ?” என முன்னர்ப்படியும் நெஞ்சொடு, பன்முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்தவடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன்தொண்டர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
நின்ற வன் தொண்டர் நீரணி வேணிய நின் மலர்க் கழல் சாரச்சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் எனச் செப்பகுன்ற வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்திவென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல்தொழ விரைந்து எய்தி.
சொற்பிரிப்பு
நின்ற வன்தொண்டர் “நீர் அணி வேணிய! நின் மலர்க் கழல் சாரச்சென்று சேரலன் திருமணி வாயிலின் புறத்தினன்” எனச் செப்பக்குன்ற வில்லியார் பெரிய தேவரைச் ”சென்று கொணர்க,” என, அவர் எய்தி,“வென்றி வானவர்க்கு அருளிப்பாடு” என அவர் கழல் தொழ விரைந்து எய்தி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
மங்கை பாகர் தம் திருமுன்பு சேய்த்தாக வந்தித்து மகிழ்வு எய்திப்பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிடப் புதுமதி அலைகின்றகங்கைவார் சடைக் கயிலை நாயகர் திருமுறுவலின் கதிர் காட்டிஇங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
மங்கை பாகர் தம் திரு முன்பு சேய்த்தாக வந்தித்து மகிழ்வு எய்திப்பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிடப் புதுமதி அலைகின்றகங்கை வார்சடைக் கயிலை நாயகர், திருமுறுவலின் கதிர் காட்டி,“இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என்!” என அருள் செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றிப்புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணைத் தெண்திரை செய் வெள்ளமுன் கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப் பெற்றேன்விரைசெய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று.
சொற்பிரிப்பு
அரசர் அஞ்சலி கூப்பி நின்று “ அடியேன் ஆரூரர் கழல் போற்றிப்புரசை யானை முன் சேவித்து வந்தனன்; பொழியும் நின் கருணைத் தெண்திரை செய் வெள்ளம் முன் கொடு வந்துபுகுத்தலின் திருமுன்பு வரப் பெற்றேன்;விரை செய் கொன்றை சேர் வேணியாய்! இனி ஒரு விண்ணப்பம் உளது” என்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய் உனை அன்பால்திருவுலாப் புறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெற வேண்டும்மருவு பாசத்தை அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாய் என்னஅருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார்.
சொற்பிரிப்பு
“பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய்! உனை அன்பால்திருஉலாப் புறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெற வேண்டும்;மருவு பாசத்தை அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாய்” என்னஅருளும் ஈசரும் “சொல்லுக” என்றனர்: அன்பரும் கேட்பித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப் புறம் கொண்டுநாரி பாகரும் நலம் மிகு திருவருள் நயப்புடன் அருள் செய்வார்ஊரன் ஆகிய ஆலால சுந்தரனுடன் அமர்ந்து இருவீரும்சார நங்கண நாதர்தம் தலைமையில் தங்கும் என்று அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருஉலாப் புறம்கொண்டுநாரி பாகரும் நலம் மிகு திருஅருள் நயப்புடன் அருள் செய்வார்;“ஊரன் ஆகிய ஆலால சுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும்சார நம் கண நாதராம் தலைமையில் தங்கும்” என்று அருள் செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
அன்ன தன்மையில் இருவரும் பணிந்தெழுந்து அருள் தலை மேல் கொண்டுமன்னும் வன்தொண்டர் ஆலால சுந்தரர் ஆகித் தாம் வழுவாதமுன்னை நல்வினைத் தொழில் தலை நின்றனர் முதல் சேரர் பெருமானும்நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்புறு தொழில் பூண்டார்.
சொற்பிரிப்பு
அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து, அருள் தலை மேல் கொண்டுமன்னும் வன்தொண்டர் ஆலால சுந்தரர் ஆகித், தாம் வழுவாதமுன்னை நல்வினைத் தொழில் தலை நின்றனர்; முதல் சேரர் பெருமானும்நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்புறு தொழில் பூண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
தலத்து வந்துமுன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும்நலத்தின் மிக்கவர் வல்வினைத் தொடக்கற நாயகி அருளாலேஅலத்த மெல்லடிக் கமலினியாருடன் அனிந்தை யாராகிமலைத் தனிப் பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழிநின்றார்.
சொற்பிரிப்பு
தலத்து வந்து முன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும்நலத்தின் மிக்கவர் வல்வினைத் தொடக்கு அற நாயகி அருளாலேஅலத்த மெல் அடிக் கமலினியாருடன் அனிந்திதையார் ஆகிமலைத் தனிப் பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழி நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
வாழி மாதவர் ஆலால சுந்தரர் வழியிடை அருள் செய்தஏழிசைத் திருப்பதிகம் இவ்வுலகினில் ஏற்றிட எறி முன்நீர்ஆழி வேந்தனாம் வருணனுக்கு அளித்திட அவனும் அவ்வருள் சூடிஊழியில் தனி ஒருவர் தம் திருவஞ்சைக் களத்தில் உய்த்து உணர்வித்தான்.
சொற்பிரிப்பு
வாழி மாதவர் ஆலால சுந்தரர் வழி இடை அருள்செய்தஏழ் இசைத் திருப்பதிகம் இவ் உலகினில் ஏற்றிட எறி முந்நீர்ஆழி வேந்தனாம் வருணனுக்கு அளித்திட அவனும் அவ் அருள் சூடிஊழியில் தனி ஒருவர் தம் திருஅஞ்சைக் களத்தில் உய்த்து உணர்வித்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத் திருவுலாப் புறம் அன்றுசாரல் வெள்ளியங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்தப்பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே.
சொற்பிரிப்பு
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத் திருஉலாப் புறம் அன்றுசாரல் வெள்ளி அங் கயிலையில் கேட்ட மாசாத்தனார் தரித்து இந்தப்பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிடமன்றுளார் அடியாரவர் வான் புகழ்நின்றது எங்கும் நிலவி உலகெலாம்வெள்ளானைச் சருக்கம் முற்றிற்று.இரண்டாம் காண்டம் முற்றிற்று.பெரிய புராணம் முற்றிற்று.பன்னிரண்டாம் திருமுறை முற்றிற்று.
சொற்பிரிப்பு
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிடமன்று உளார் அடியார் அவர் வான்புகழ்நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.