திருமுறை 11 · 11.041 · 11

திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை

அருளியவர்
நம்பியாண்டார் நம்பி

1

புலனோ டாடித் திரிமனத்தவர்பொறிசெய் காமத் துரிசடக்கியபுனித நேசத் தொடுத மக்கையர்புணர்வி னாலுற் றுரைசெ யக்குடர்சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர்சுடுவெ ணீறிட் டமணகற்றியதுணிவி னான்முப் புரமெரித்தவர்சுழலி லேபட் டிடுத வத்தினர்உலகின் மாயப் பிறவி யைத்தரும்உணர்வி லாஅப் பெரும யக்கினைஒழிய வாய்மைக் கவிதை யிற்பலஉபரி யாகப் பொருள்ப ரப்பியஅலகில் ஞானக் கடலி டைப்படும்அமிர்த யோகச் சிவவொ ளிப்புகஅடிய ரேமுக் கருளி னைச்செயும்அரைய தேவத் திருவ டிக்களே.
சொற்பிரிப்பு
புலனோடு ஆடித் திரி மனத்தவர்பொறிசெய் காமத் துரிசு அடக்கியபுனித நேசத்தொடு தமக்கையர்புணர்வினால் உற்றுரை செயக் குடர்சுலவு சூலைப் பிணி கெடுத்து ஒளிர்சுடு வெணீறு இட்டு அமணகற்றியதுணிவினான் முப்புரம் எரித்தவர்சுழலிலே பட்டு இடு தவத்தினர்உலகின் மாயப் பிறவியைத் தரும்உணர்விலா அப் பெரு மயக்கினைஒழிய வாய்மைக் கவிதையிற் பலஉபரியாகப் பொருள் பரப்பியஅலகில் ஞானக் கடலிடைப் படும்அமிர்த யோகச் சிவவொளிப் புகஅடியரேமுக்கு அருளினைச் செயும்அரைய தேவத் திருவடிக்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதிதெளிதேனொத் தினியசொல் மடவாருர்ப் பசிமுதல்வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசிலவசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்உருஞானத் திரள்மன முருகாநெக் கழுதுகண்உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்குருவாகக் கொடுசிவ னடிசூடத் திரிபவர்குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.
சொற்பிரிப்பு
திருநாவுக்கரசு அடியவர் நாடற்கு அதிநிதிதெளிதேன் ஒத்து இனியசொல் மடவார் உர்ப்பசி முதல்வருவானத்து அரிவையர் நடமாடிச் சிலசிலவசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்உருஞானத் திரள் மனம் உருகா நெக்கு அழுது கண்உழவாரப் படைகையில் உடையான் வைத்தன தமிழ்குருவாகக் கொடு சிவனடி சூடத் திரிபவர்குறுகார் புக்கு இடர்படு குடர் யோனிக் குழியிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்குரும்பை முலையிடையே செலுந்தகை நன்மடவார்அழிந்த பொசியதிலே கிடந்தி ரவுபகல்நீஅளைந்த யருமதுநீ அறிந்திலை கொல்மனமேகழிந்த கழிகிடுநாள் இணங்கி தயநெகவேகசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியேபொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையேபுரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே.
சொற்பிரிப்பு
குழிந்து சுழிபெறு நாபியின் கண் மயிர் நிரையார்குரும்பை முலையிடையே செலுந்தகை நன்மடவார்அழிந்த பொசியதிலே கிடந்து இரவு பகல் நீஅளைந்த அருமது நீ அறிந்திலை கொல்மனமேகழிந்த கழிகிடுநாள் இணங்கி தய நெகவேகசிந்து இதயமெழுநூறு அரும் பதிக நிதியேபொழிந்தருளு திருநாவின் எங்கள் அரசினையேபுரிந்து நினை இதுவே மருந்து பிறிதிலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இலைமா டென்றிடர் பரியார் இந்திரனேஒத் துறுகுறை வற்றாலும்நிலையா திச்செல்வ மெனவே கருதுவர்நீள்சன் மக்கடலி டையிற்புக்கலையார் சென்றரன் நெறியா குங்கரைஅண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்சிலைமா டந்திகழ் புகழா மூருறைதிருநா வுக்கர சென்போரே.
சொற்பிரிப்பு
இலை மாடு என்று இடர்பரியார் இந்திரனே ஒத்துறு குறைவற்றாலும்நிலையாது இச்செல்வம் எனவே கருதுவர்நீள் சன்மக் கடல் இடையிற் புக்குஅலையார் சென்று அரன் நெறியா குங் கரைஅண்ணப்பெறுவர்கள் வண்ணத் திண்சிலை மாடம் திகழ் புகழ் ஆமூர் உறைதிருநாவுக்கரசு என்போரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

என்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையைஇங்கிட்டுச் சுட்டபின் எங்குத்தைக் குச்செலும்முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கெனமொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சிலவன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியைவஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர்அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர்அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே.
சொற்பிரிப்பு
என்பு அட்டிக் கட்டியஇந்தப் பைக் குரம்பையைஇங்கிட்டுச் சுட்ட பின் எங்குத்தைக்குச் செலும்முன்பிட்டுச் சுட்டி வருந் திக் எத் திக்கெனமொய்ம்புற்றுக் கற்றறிவு இன்றிக் கெட்டுச் சிலவன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியைவஞ்சித்துக் கத்தி விழுந்து எச்சுத் தட்டுவர்அன்பர்க்குப் பற்றிலர் சென்று அர்ச்சிக்க இற்றிலர்அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவுபெட்டியுரை செய்துசோறு சுட்டியுழல் சமண்வாயர்கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசைகற்றமதி யினனோசை இத்தரசு புகழ்ஞாலம்முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்கற்றுணையில் வருமாதி ................பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலைபற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.
சொற்பிரிப்பு
பித்தரசு பதையாத கொத்தை நிலை உள தேவுபெட்டியுரை செய்து சோறு சுட்டி உழல் சமண் வாயர்கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசைகற்றமதியினன் ஓசை இத்தரசு புகழ் ஞாலம்முத்தி பெறு திருவாளன் எற்றுணையின் மிதவாமல்கற்றுணையில் வருமாதி …—…—…—……பத்தரசு வசை தீர வைத்த கன தமிழ்மாலைபற்பலவும் அவையோதநற்பதிக நிதிதானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகிபரசுநா வரசான பரமகா ரணவீசன்அதிகைமா நகர்மேவி அருளினால் அமண்மூடர்அவர்செய்வா தைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின்நிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மைநெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சாலமதியரா குவர்ஈசன் அடியரா குவர்வானம்உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே.
சொற்பிரிப்பு
பதிகம் ஏழெழுநூறு பகருமா கவியோகிபரசு நாவரசான பரமகாரண வீசன்அதிகை மாநகர் மேவி அருளினால் அமண் மூடர்அவர் செய் வாதைகள் தீரும் அனகன் வார் கழல் சூடின்நிதியர் ஆகுவர் சீர்மை உடையர் ஆகுவர் வாய்மைநெறியர் ஆகுவர் பாவம் வெறியர் ஆகுவர் சாலமதியர் ஆகுவர் ஈசன் அடியர் ஆகுவர் வானம்உடையர் ஆகுவர் பாரில் மனிதர் ஆனவர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தாமரைநகும் அகவிதழ் தகுவனசாய்பெறுசிறு தளிரினை அனையனசார்தருமடி யவரிடர் தடிவனதாயினும் நல கருணையை உடையனதூமதியினை ஒருபது கொடுசெய்தசோதியின்மிகு கதிரினை யுடையனதூயனதவ முனிவர்கள் தொழுவனதோமறுகுண நிலையின தலையினஓமரசினை மறைகளின் முடிவுகள்ஓலிடுபரி சொடுதொடர் வரியனஓவறுமுணர் வொடுசிவ வொளியனஊறியகசி வொடுகவி செய்தபுகழ்ஆமரசுயர் அகநெகு மவருளனாரரசதி கையினர னருளுவனாமரசுகொ ளரசெனை வழிமுழுதாளரசுதன் அடியிணை மலர்களே.
சொற்பிரிப்பு
தாமரை நகும் அகவிதழ் தகுவனசாய்பெறு சிறு தளிரினை அனையனசார்தரும் அடியவர் இடர் தடிவனதாயினும் நல கருணையை உடையனதூமதியினை ஒருபது கொடு செய்தசோதியின் மிகு கதிரினை யுடையனதூயன தவ முனிவர்கள் தொழுவனதோமறு குண நிலையின தலையினஓம் அரசினை மறைகளின் முடிவுகள்ஓலிடு பரிசொடு தொடர்வரியனஓவறும் உணர்வொடு சிவ ஒளியனஊறிய கசிவொடு கவி செய்த புகழ் ஆம்அரசு உயர் அக நெகும் அவர்உளன் ஆர் அரசு அதிகையின் அரன் அருளவன்ஆமரசு கொள் அரசு எனை வழி முழுதாள் அரசு தன் அடியிணை மலர்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்தறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங்கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலும்அப்பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.
சொற்பிரிப்பு
அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்துஅறியா அப் பசுதைச் சிறியோரில் செறியுங்கொடியேனுக்கு அருளைத் திருநாவுக்கு அரசைக்குணமேருத் தனை விட்டு எனை யாம் மொட்டு அகல்விற்பிடியாராப் பெறுதற்கு அரிதாகச் சொலும் அப்பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்செடி காயத் துறிகைச் சமண் மூடர்க்கு இழவுற்றஅது தேவர்க்கு அரிது அச் சிவலோகக் கதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சிவசம் பத்திடைத் தவஞ்செய்துதிரியும் பத்தியிற் சிறந்தவர்திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர்திகழும் பைம்பொடித் தவண்டணிகவசம் புக்குவைத் தரன்கழல்கருதுஞ் சித்தனிற் கவன்றியகரணங் கட்டுதற் கடுத்துளகளகம் புக்கநற் கவந்தியன்அவசம் புத்தியிற் கசிந்துகொடழுகண் டத்துவைத் தளித்தனன்அனகன் குற்றமற் றபண்டிதன்அரசெங் கட்கொர்பற் றுவந்தறுபவசங் கைப்பதைப் பரஞ்சுடர்படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்பசுபந் தத்தினைப் பரிந்தடுபரிசொன் றப்பணிக் குநன்றுமே.
சொற்பிரிப்பு
சிவ சம்பத்து இடைத் தவஞ்செய்துதிரியும் பத்தியில் சிறந்தவர்திலகன் கற்ற சிட்டன் வெந்தொளிர்திகழும் பைம்பொடித் தவண்டணிகவசம் புக்கு வைத்து அரன் கழல்கருதும் சித்தன் இல் கவன்று இயல்கரணம் கட்டுதற்கு அடுத்துளகளகம் புக்கநற் கவந்தியன்அவசம் புத்தியிற் கசிந்துகொடுஅழுகண்டத்து வைத்து அளித்தனன்அனகன் குற்றமற்ற பண்டிதன்அரசு எங்கட்கு ஒர் பற்று வந்தறுபவசங்கைப் பதைப் பரஞ்சுடர்படிறின்று இத்தனைத் தொடர்ந்தவர்பசுபந்தத்தினைப் பரிந்து அடுபரிசு ஒன்றப் பணிக்கு நன்றுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நன்று மாதர நாவினுக் கரைசடிநளினம் வைத்துயின் அல்லால்ஒன்று மாவது கண்டிலம் உபாயமற்றுள்ளன வேண்டோமால்என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்இகபரத் திடைப்பட்டுப்பொன்று வார்புகுஞ் சூழலிற் புகேம்புகிற்பொறியிலைம் புலனோடே.
சொற்பிரிப்பு
நன்று மாதர நாவினுக்கு அரைசு அடி நளினம் வைத்து உயின் அல்லால்ஒன்றுமாவது கண்டிலம் உபாயம் மற்று உள்ளன வேண்டோமால்என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர் இகபரத்து இடைப்பட்டுப்பொன்றுவார் புகும் சூழலில் புகேம் புகில் பொறியில் ஐம்புலனோடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.