திருமுறை 10 · 10.03.16 · 7

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந்தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே
சொற்பிரிப்பு
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந்தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந்தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்றுவள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே
சொற்பிரிப்பு
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந்தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்றுவள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும்இவ்வா றறிகின்ற யோகி இறைவனேஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே
சொற்பிரிப்பு
செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும்இவ்வா றறிகின்ற யோகி இறைவனேஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மாறி வருமிரு பான்மதி வெய்யவன்ஏறி இழியுந் இடைபிங் கலையிடைஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரந்தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே
சொற்பிரிப்பு
மாறி வருமிரு பான்மதி வெய்யவன்ஏறி இழியுந் இடைபிங் கலையிடைஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரந்தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

உதித்து வலத்திடம் போகின்ற போது1அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்உதித்தது வேமிக வோடிடு மாகில்உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றேபா-ம் : 1அதிற்கஞ்சி 1அதிற்றுஞ்சி
சொற்பிரிப்பு
உதித்து வலத்திடம் போகின்ற போதுஅதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்உதித்தது வேமிக வோடிடு மாகில்உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடிஅடுகின்ற வாயுவை அந்தணன் கூடிஇடுகின்ற வாறுசென் றின்பணி சேரமுடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே
சொற்பிரிப்பு
நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடிஅடுகின்ற வாயுவை அந்தணன் கூடிஇடுகின்ற வாறுசென் றின்பணி சேரமுடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஆயும் பொருளும் அணிமலர் மேலதுவாயு விதமும் பதினா றுளவலிபோய மனத்தைப் பொருகின்ற வாதாரம்ஆயவு நாளு 1முகுர்த்தமு மாமேபா-ம் : 1முகுத்தமு
சொற்பிரிப்பு
ஆயும் பொருளும் அணிமலர் மேலதுவாயு விதமும் பதினா றுளவலிபோய மனத்தைப் பொருகின்ற வாதாரம்ஆயவு நாளு முகுர்த்தமு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.