1
பணிந்தெண் திசையும் பரமனை நாடித்துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானைஅணிந்தெண் திசையினும் அட்டமா சித்திதணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே
சொற்பிரிப்பு
பணிந்தெண் திசையும் பரமனை நாடித்துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானைஅணிந்தெண் திசையினும் அட்டமா சித்திதணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
பரிசறி வானவர் பண்பன் அடியெனத்துரிசற நாடியே தூவெளி கண்டேன்அரிய தெனக்கில்லை அட்டமா சித்திபெரிதருள் செய்து பிறப்பறுத் தானே
சொற்பிரிப்பு
பரிசறி வானவர் பண்பன் அடியெனத்துரிசற நாடியே தூவெளி கண்டேன்அரிய தெனக்கில்லை அட்டமா சித்திபெரிதருள் செய்து பிறப்பறுத் தானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
குரவன் அருளிற் குறிவழி மூலன்பரையின் 1மணமிகு சங்கட்டம் பார்த்துத்தெரிதரு சாம்பவி கேசரி சேரப்பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியேபா-ம் : 1மனமிகு சக்கட்ட மார்த்துத்
சொற்பிரிப்பு
குரவன் அருளிற் குறிவழி மூலன்பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்தெரிதரு சாம்பவி கேசரி சேரப்பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
காயாதி பூதங் கலைகால மாயையில்ஆயா தகல அறிவொன் றனாதியேஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்வீயாப் பரகாயம் மேவலு மாமே
சொற்பிரிப்பு
காயாதி பூதங் கலைகால மாயையில்ஆயா தகல அறிவொன் றனாதியேஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்வீயாப் பரகாயம் மேவலு மாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்மருவிய கன்ம மாமந்த யோகந்தருமிவை காய உழைப்பாகுந் தானே1அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கேபா-ம் : 1அருமிரு
சொற்பிரிப்பு
இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்மருவிய கன்ம மாமந்த யோகந்தருமிவை காய உழைப்பாகுந் தானேஅருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்உதய மதுநா லொழியவோ ரெட்டுப்பதியுமஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்திதமான ஈராறு சித்திக ளாமே
சொற்பிரிப்பு
மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்உதய மதுநா லொழியவோ ரெட்டுப்பதியுமஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்திதமான ஈராறு சித்திக ளாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
நாடும் பிணியாகு நஞ்சனஞ்சூழ்ந்தக்கால்நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்பீடொன்றி னால்வாயாச் சித்திகள்பே தத்தின்நீடுங் தூரங்கேட்டல் நீண்முடி வீராறே
சொற்பிரிப்பு
நாடும் பிணியாகு நஞ்சனஞ்சூழ்ந்தக்கால்நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்பீடொன்றி னால்வாயாச் சித்திகள்பே தத்தின்நீடுங் தூரங்கேட்டல் நீண்முடி வீராறே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரைதாழான ஒன்பதிற் றான்பர காயமே
சொற்பிரிப்பு
ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரைதாழான ஒன்பதிற் றான்பர காயமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்1ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்திசீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று2ஏருன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறேபாடம் : 1நேரொன்று. 2ஓரொன்று; ஓரொன்றில்
சொற்பிரிப்பு
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்திசீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்றுஏருன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
தானே அணுவுஞ் சகத்துத்தன் 1நொய்ம்மையும்மானாக் 2கனமும் பரகாயத் தேகலுந்தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்ஆனாத வுண்மையும் 3வியாபியு மாம்எட்டேபா-ம் : 1நோன்மையும் 2ககனமும் 3வியாப்பிய
சொற்பிரிப்பு
தானே அணுவுஞ் சகத்துத்தன் நொய்ம்மையும்மானாக் கனமும் பரகாயத் தேகலுந்தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லையாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்கோங்கி வரமுத்தி1 முந்திய வாறேபா-ம் : 1கோங்கிய வாமுத்தி
சொற்பிரிப்பு
தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லையாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்கோங்கி வரமுத்தி முந்திய வாறே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
முந்திய முந்நூற் றறுபது காலமும்வந்தது நாழிகை வான்முத லாயிடச்சிந்தை 1செயச்செய மண்முதல் தேர்ந்தறிந்துந்தியுள் நின்று உதித்தெழு மாறேபா-ம் : 1செய் மண் முதல் தேர்ந்தறி வார்வல முந்தியுள்
சொற்பிரிப்பு
முந்திய முந்நூற் றறுபது காலமும்வந்தது நாழிகை வான்முத லாயிடச்சிந்தை செயச்செய மண்முதல் தேர்ந்தறிந்துந்தியுள் நின்று உதித்தெழு மாறே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
சித்தந் திரிந்து சிவமய மாகியேமுத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்சித்தம் பரத்தில் திருநடத் தோரே
சொற்பிரிப்பு
சித்தந் திரிந்து சிவமய மாகியேமுத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்சித்தம் பரத்தில் திருநடத் தோரே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தனஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திடஒத்த வுடலும் உயிரும் இருந்ததே
சொற்பிரிப்பு
ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தனஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திடஒத்த வுடலும் உயிரும் இருந்ததே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்இருக்கும் இருநூற் றிருபத்து மூன்றாய்இருக்கு 1முடலி லிருந்தில வாகில்இருக்கும் உடலது வீங்கி வெடித்ததேபா-ம் : 1முடலீ திருந்தில
சொற்பிரிப்பு
இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்இருக்கும் இருநூற் றிருபத்து மூன்றாய்இருக்கு முடலி லிருந்தில வாகில்இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்வீங்கிய வாதமுங் கூனு 1முடமதாய்வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியேபா-ம் : 1முடமதாம்
சொற்பிரிப்பு
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்வீங்கிய வாதமுங் கூனு முடமதாய்வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற்கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே
சொற்பிரிப்பு
கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற்கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
நாடியின் ஓசை நயனம் இருதயந்தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்தேவருள் ஈசன் திருமால் பிரமனும்ஓவற நின்றங் குணர்ந்திருந் 1தாரேபா-ம் : 1தார்களே
சொற்பிரிப்பு
நாடியின் ஓசை நயனம் இருதயந்தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்தேவருள் ஈசன் திருமால் பிரமனும்ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட் (கு)ஒன்பது 1காட்சி யிலைபல வாமேபா-ம் : 1வாசல் உலைநலமாமே
சொற்பிரிப்பு
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்குஒன்பது காட்சி யிலைபல வாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்லவாங்கி இரவி மதிவழி ஓடிடத்தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திடஆங்கது சொன்னோம் 1அருவழி யோர்க்கேபா-ம் : 1அறிவுடை
சொற்பிரிப்பு
ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்லவாங்கி இரவி மதிவழி ஓடிடத்தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திடஆங்கது சொன்னோம் அருவழி யோர்க்கே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடிவலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே
சொற்பிரிப்பு
தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடிவலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டுபாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே
சொற்பிரிப்பு
ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டுபாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பதுமட்டிட்ட 1கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்2கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய்ப்பொட்டிட்டு நின்று பூரண மானதேபா-ம் : 1கண்ணியர் 2தட்டிட்டு நின்று தளங்களினூடுபோய்ப்
சொற்பிரிப்பு
கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பதுமட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய்ப்பொட்டிட்டு நின்று பூரண மானதே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
பூரண சத்தி ஏழுமூன் றறையாகஏரணி கன்னியர் எழுநூற்றஞ் சாக்கினார்நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்காரண மாகிக் கலந்து விரிந்ததே
சொற்பிரிப்பு
பூரண சத்தி ஏழுமூன் றறையாகஏரணி கன்னியர் எழுநூற்றஞ் சாக்கினார்நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்காரண மாகிக் கலந்து விரிந்ததே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கைகரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்பரந்து குவிந்தது பார்முதற் பூதம்இரைந்தெழு வாயு விடத்தில் 1ஒடுங்கேபா-ம் : 1ஓங்கே
சொற்பிரிப்பு
விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கைகரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்பரந்து குவிந்தது பார்முதற் பூதம்இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
இடையொடு பிங்கலை என்னும் இரண்டுமடைபடு வாயுவு மாறியே நிற்குந்தடையவை 1யாறேழுந் தண்சுட ருள்ளேமிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கேபா-ம் : 1யாறெழுந்
சொற்பிரிப்பு
இடையொடு பிங்கலை என்னும் இரண்டுமடைபடு வாயுவு மாறியே நிற்குந்தடையவை யாறேழுந் தண்சுட ருள்ளேமிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்மடங்கி அடங்கிடும் வாயு வதனுள்மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளேநடங்கொண்ட 1கூத்தனும் நாடுகின் றானேபா-ம் : 1கூத்தனை நாடுகின் றேனே
சொற்பிரிப்பு
ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்மடங்கி அடங்கிடும் வாயு வதனுள்மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளேநடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டுபாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டுமாடி ஒருகை மணிவிளக் கானதே
சொற்பிரிப்பு
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டுபாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டுமாடி ஒருகை மணிவிளக் கானதே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
அணுமாதி சித்திக ளானவை கூறில்அணுவில் அணுவின் பெருமையில் நேர்மைஇணுகாத வேகார் பரகாய மேவல்1அணுவத் தனையெங்குந் 2தானாத லென்றெட்டேபா-ம் : 1அணுமைத் 2தானாக
சொற்பிரிப்பு
அணுமாதி சித்திக ளானவை கூறில்அணுவில் அணுவின் பெருமையில் நேர்மைஇணுகாத வேகார் பரகாய மேவல்அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானுவிட்டான் மதியுண்ண வும்வரு மேலதே
சொற்பிரிப்பு
எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானுவிட்டான் மதியுண்ண வும்வரு மேலதே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரைசத்தி அருள்தரத் தானுள வாகுமே
சொற்பிரிப்பு
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரைசத்தி அருள்தரத் தானுள வாகுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்இட்டம துள்ளே 1இறுக்கல் பரகாட்சிஎட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமேபா-ம் : 1இருக்கல்
சொற்பிரிப்பு
எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சிஎட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்தந்தின்றி நற் 1கா மியலோகஞ் சார்வாகும்அந்த வுலகம் அணிமாதி யாமேபா-ம் : 1காய மிய
சொற்பிரிப்பு
மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்தந்தின்றி நற் கா மியலோகஞ் சார்வாகும்அந்த வுலகம் அணிமாதி யாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்அணிந்த அணிமாகை தானாம் இவனுந்தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகிமெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே
சொற்பிரிப்பு
முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்அணிந்த அணிமாகை தானாம் இவனுந்தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகிமெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச்சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே
சொற்பிரிப்பு
ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச்சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
மாலகு வாகிய மாயனைக் கண்டபின்தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றதுமேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே
சொற்பிரிப்பு
மாலகு வாகிய மாயனைக் கண்டபின்தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றதுமேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே
சொற்பிரிப்பு
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
ஆகின்ற காலொளி யாவது கண்டபின்போகின்ற காலங்கள் போவது மில்லையாம்மேனின்ற காலம் வெளியுற 1நின்றன2தானின்ற காலங்கள் தன்வழி யாகுமேபா-ம் : 1நின்றபின் 2தாழ்கின்ற
சொற்பிரிப்பு
ஆகின்ற காலொளி யாவது கண்டபின்போகின்ற காலங்கள் போவது மில்லையாம்மேனின்ற காலம் வெளியுற நின்றனதானின்ற காலங்கள் தன்வழி யாகுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
தன்வழி யாகத் தழைத்திடுஞானமுந்தன்வழி 1யாகத் தழைத்திடும் வையகந்தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்தன்வழி தன்னரு ளாகிநின் றானேபா-ம் : 1மீதாகத்
சொற்பிரிப்பு
தன்வழி யாகத் தழைத்திடுஞானமுந்தன்வழி யாகத் தழைத்திடும் வையகந்தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்தன்வழி தன்னரு ளாகிநின் றானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
நின்றன தத்துவ நாயகி தன்னுடன்கண்டன பூதப் 1படையவை யெல்லாங்கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமேபா-ம் : 1படையானவையெலாங்
சொற்பிரிப்பு
நின்றன தத்துவ நாயகி தன்னுடன்கண்டன பூதப் படையவை யெல்லாங்கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்பாகின்ற பூவிற் பரப்பவை காணலா1மேகின்ற காலம் வெளியுற நின்றதுபோகின்ற காலங்கள் போவது மில்லையேபா-ம் : 1மேனின்ற
சொற்பிரிப்பு
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்பாகின்ற பூவிற் பரப்பவை காணலாமேகின்ற காலம் வெளியுற நின்றதுபோகின்ற காலங்கள் போவது மில்லையே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
போவதொன் றில்லை வருவது தானில்லைசாவதொன் றில்லை தழைப்பது தானில்லைதாமத மில்லை தமரகத் தின்னொளியாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே
சொற்பிரிப்பு
போவதொன் றில்லை வருவது தானில்லைசாவதொன் றில்லை தழைப்பது தானில்லைதாமத மில்லை தமரகத் தின்னொளியாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்பறிந்தது பூதப் படையவை யெல்லாங்குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்1விரிந்தது பரகாய மேவலு மாமேபா-ம் : 1விரிந்த
சொற்பிரிப்பு
அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்பறிந்தது பூதப் படையவை யெல்லாங்குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்விரிந்தது பரகாய மேவலு மாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
ஆன விளக்கொளி யாவ தறிகிலர்மூல விளக்கொளி முன்னே யுடையவர்கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்குமேலை விளக்கொளி வீடெளி தாநின்றே
சொற்பிரிப்பு
ஆன விளக்கொளி யாவ தறிகிலர்மூல விளக்கொளி முன்னே யுடையவர்கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்குமேலை விளக்கொளி வீடெளி தாநின்றே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்கண்டன பூதப் படையவை எல்லாங்கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே
சொற்பிரிப்பு
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்கண்டன பூதப் படையவை எல்லாங்கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
ஆகின்ற சந்திரன் 1தன்னொளி யாயவன்ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்ஆகின்ற சந்திரன் தானவ னாமேபா-ம் : 1தண்ணளி
சொற்பிரிப்பு
ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்ஆகின்ற சந்திரன் தானவ னாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
தானே படைத்திட வல்லவ னாயிடுந்தானே யளித்திட வல்லவ னாயிடுந்தானே சங்காரத் தலைவனு மாயிடுந்தானே யிவனெனுந் தன்மைய னாமே
சொற்பிரிப்பு
தானே படைத்திட வல்லவ னாயிடுந்தானே யளித்திட வல்லவ னாயிடுந்தானே சங்காரத் தலைவனு மாயிடுந்தானே யிவனெனுந் தன்மைய னாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
தன்மைய தாகத் தழைத்த கலையினுள்பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தைவன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்மென்மைய தாகிய மெய்பொருள் காணுமே
சொற்பிரிப்பு
தன்மைய தாகத் தழைத்த கலையினுள்பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தைவன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்மென்மைய தாகிய மெய்பொருள் காணுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாந்தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே
சொற்பிரிப்பு
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாந்தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
தன்மைய தாகத் தழைத்த பகலவன்மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்பொன்மைய தாகப் புலன்களும் போயிடநன்மைய தாகிய நற்கொடி காணுமே
சொற்பிரிப்பு
தன்மைய தாகத் தழைத்த பகலவன்மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்பொன்மைய தாகப் புலன்களும் போயிடநன்மைய தாகிய நற்கொடி காணுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டுபொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்கற்கொடி யாகிய காமுக னாமே
சொற்பிரிப்பு
நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டுபொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்கற்கொடி யாகிய காமுக னாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
காமரு தத்துவ மானது வந்தபின்பூமரு கந்தம் புவனம தாயிடும்மாமரு 1வுன்னிடை மெய்த்திடு மானனாய்நாமரு வும்ஒளி நாயக மானதேபா-ம் : 1வுன்னிடம் எய்திடு
சொற்பிரிப்பு
காமரு தத்துவ மானது வந்தபின்பூமரு கந்தம் புவனம தாயிடும்மாமரு வுன்னிடை மெய்த்திடு மானனாய்நாமரு வும்ஒளி நாயக மானதே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
நாயக மாகிய நல்லொளி கண்டபின்தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்போயக மான புவனங்கள் கண்டபின்பேயக மாகிய பேரொளி காணுமே
சொற்பிரிப்பு
நாயக மாகிய நல்லொளி கண்டபின்தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்போயக மான புவனங்கள் கண்டபின்பேயக மாகிய பேரொளி காணுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
பேரொளி யாகிய பெரியஅவ் 1வேட்டையும்பாரொளி யாகப் பதைப்புறக் கண்டவன்தாரொளி யாகத் தரணி முழுதுமாம்ஓரொளி யாகிய காலொளி காணுமேபா-ம் : 1வெட்டையும்
சொற்பிரிப்பு
பேரொளி யாகிய பெரியஅவ் வேட்டையும்பாரொளி யாகப் பதைப்புறக் கண்டவன்தாரொளி யாகத் தரணி முழுதுமாம்ஓரொளி யாகிய காலொளி காணுமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்காலது அக்கொடி நாயகி தன்னுடன்காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையுங்காலது 1வேண்டிக் கொண்டஇவ் வாறேபா-ம் : 1பெண்மண்டிக்
சொற்பிரிப்பு
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்காலது அக்கொடி நாயகி தன்னுடன்காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையுங்காலது வேண்டிக் கொண்டஇவ் வாறே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுளஆறது வாயிர மாகு மருவழிஆறது வாக வளர்ப்ப திரண்டே
சொற்பிரிப்பு
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுளஆறது வாயிர மாகு மருவழிஆறது வாக வளர்ப்ப திரண்டே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
இரண்டினின் மேலே சதாசிவ நாயகிஇரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த்திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே
சொற்பிரிப்பு
இரண்டினின் மேலே சதாசிவ நாயகிஇரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த்திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகிஅஞ்சுடன் அஞ்சது வாயுத மாவதுஅஞ்சது வன்றி இரண்டது வாயிரம்அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே
சொற்பிரிப்பு
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகிஅஞ்சுடன் அஞ்சது வாயுத மாவதுஅஞ்சது வன்றி இரண்டது வாயிரம்அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
59
ஒன்றது வாகிய தத்துவ நாயகிஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில்ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே
சொற்பிரிப்பு
ஒன்றது வாகிய தத்துவ நாயகிஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில்ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
60
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்முன்னுறும் 1ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்முன்னுறு வாயு முடிவகை யாமேபா-ம் : 1ஐம்பதொ டொன்றுடன்
சொற்பிரிப்பு
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்முன்னுறும் ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்முன்னுறு வாயு முடிவகை யாமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
61
ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்ஆய்வரும் ஐஞ்நூற்று முப்பதொ டொன்பதுமாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே
சொற்பிரிப்பு
ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்ஆய்வரும் ஐஞ்நூற்று முப்பதொ டொன்பதுமாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
62
இருநிதி யாகிய எந்தை யிடத்துஇருநிதி வாயு இயங்கு நெறியில்இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்இருநிதி வாயு இயங்கும் எழுத்தே
சொற்பிரிப்பு
இருநிதி யாகிய எந்தை யிடத்துஇருநிதி வாயு இயங்கு நெறியில்இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்இருநிதி வாயு இயங்கும் எழுத்தே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
63
எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்எழுகின்ற வாயு இடமது சொல்லில்எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே
சொற்பிரிப்பு
எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்எழுகின்ற வாயு இடமது சொல்லில்எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
64
ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிடஎட்டது கால்கொண் டிடவகை 1யொத்தபின்ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவேபா-ம் : 1ஏற்றபின்
சொற்பிரிப்பு
ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிடஎட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
65
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்துந்திச் சமாதி யுடையொளி யோகியே
சொற்பிரிப்பு
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்துந்திச் சமாதி யுடையொளி யோகியே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
66
அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்1சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல்நுணங்கற் றிரோதல்கால் வேகத்து நுந்தலேபா-ம் : 1சிணுங்குற்ற வாயர் சித்திதாங் கேட்டல்
சொற்பிரிப்பு
அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல்நுணங்கற் றிரோதல்கால் வேகத்து நுந்தலே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
67
மரணஞ் 1சரைவிடல் வண்பர காயம்இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்அரணன் 2திருவுற வாதன்மூ வேழாங்3கரனுறு கேள்வி கணக்கறிந் தோனேபா-ம் : 1சிறைவிடல் 2திருவுரு 3கரணுறு
சொற்பிரிப்பு
மரணஞ் சரைவிடல் வண்பர காயம்இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்அரணன் திருவுற வாதன்மூ வேழாங்கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
68
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்துபாதங்கள் நோவ நடந்தும் பயனில்லைகாதலில் அண்ணலைக் காண இனியவர்நாதன் இருந்த நகரறி வாரே.
சொற்பிரிப்பு
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்துபாதங்கள் நோவ நடந்தும் பயனில்லைகாதலில் அண்ணலைக் காண இனியவர்நாதன் இருந்த நகரறி வாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
69
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்துசாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்பாலித்த சத்தி பரைபரன் பாதமே
சொற்பிரிப்பு
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்துசாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்பாலித்த சத்தி பரைபரன் பாதமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
70
ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்றுமீதான தற்பரை மேவும் பரனொடுமேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளிஓதா அசிந்தமீ தானந்த யோகமே
சொற்பிரிப்பு
ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்றுமீதான தற்பரை மேவும் பரனொடுமேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளிஓதா அசிந்தமீ தானந்த யோகமே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
71
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்பதியது காட்டும் பரமன்நின் றானே
சொற்பிரிப்பு
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்பதியது காட்டும் பரமன்நின் றானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
72
கட்டவல் லார்கள் 1கரந்தெங்குந் தானாவர்மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்துபொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு2நட்டறி வார்க்கு நமனில்லை தானேபா-ம் : 1கலந்தெங்குந் 2நட்டிடு
சொற்பிரிப்பு
கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தானாவர்மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்துபொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டுநட்டறி வார்க்கு நமனில்லை தானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.