திருமுறை 10 · 10.02.18 · 6

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்பள்ளமும் மேடும் பரந்து திரிவரேகள்ள மனமுடைக் கல்வியி லோரே.
சொற்பிரிப்பு
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்பள்ளமும் மேடும் பரந்து திரிவரேகள்ள மனமுடைக் கல்வியி லோரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.
சொற்பிரிப்பு
தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லைவெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்பள்ளத்தில் இட்டதோர் பந்தருள்* ளானே.* பத்தல் உள்ளானே என்றும் பாடம்
சொற்பிரிப்பு
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லைவெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்பள்ளத்தில் இட்டதோர் பந்தருள் ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.
சொற்பிரிப்பு
அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்.உடலுற்றுத்1 தேடுவார் தம்மைஒப் பாரிலர்திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்றுஉடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.பா-ம் : 1உடலுறத்
சொற்பிரிப்பு
கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்.உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்றுஉடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.
சொற்பிரிப்பு
கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.