திருமுறை 10 · 10.02.11 · 10

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதுஅங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதுஅங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதுஅங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்தநிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்உலைதந்த மெல்லரி போலும் உலகம்மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே.

3

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே.

4

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடிஅண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகிஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.

5

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே.

6

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே.

7

நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே1வைத்தசங் காரங் கேவலம் ஆன்மாவுக்குய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.
சொற்பிரிப்பு
நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்உய்த்தசங் காரமும் நாலாம் உதிக்கிலே.

9

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகாவாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

10

தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனைமாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டுகாயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே.