திருமுறை 10 · 10.02.09 · 30

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஆதியோ டந்தம் இலாத பராபரம்1போதம தாகப் புணரும் பராபரைசோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.பா-ம் : 1பராபரன்
சொற்பிரிப்பு
ஆதியோ டந்தம் இலாத பராபரம்போதம தாகப் புணரும் பராபரைசோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவேபேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.
சொற்பிரிப்பு
நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவேபேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.
சொற்பிரிப்பு
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.
சொற்பிரிப்பு
தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
சொற்பிரிப்பு
மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்திபுவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்புவனம் படைப்பானும் பூமிசை யானாய்புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.
சொற்பிரிப்பு
புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்திபுவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்புவனம் படைப்பானும் பூமிசை யானாய்புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.
சொற்பிரிப்பு
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடைகாயத்திற்1 சோதி பிறக்கும்அக் காற்றிடைஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்திநீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே.பா-ம் : 1காய்கதிர்ச்
சொற்பிரிப்பு
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடைகாயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடைஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்திநீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகிஅண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்கண்டச் சது(ர்)முகக் காரணன் தன்னொடும்பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.
சொற்பிரிப்பு
உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகிஅண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்கண்டச் சது(ர்)முகக் காரணன் தன்னொடும்பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்பாங்கார் கயிலைப் பராபரன் தானும்வீங்குங் கமல மலர்மிசை மேலயன்ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.
சொற்பிரிப்பு
ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்பாங்கார் கயிலைப் பராபரன் தானும்வீங்குங் கமல மலர்மிசை மேலயன்ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்ஆரண மாஉல காயமர்ந் தானே.
சொற்பிரிப்பு
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்ஆரண மாஉல காயமர்ந் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

பயன்எளி தாம்பரு மாமணி செய்யநயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டுஅயன்ஓளி யாயிருந் தங்கே படைக்கும்வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.
சொற்பிரிப்பு
பயன்எளி தாம்பரு மாமணி செய்யநயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டுஅயன்ஓளி யாயிருந் தங்கே படைக்கும்வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்துமேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.
சொற்பிரிப்பு
போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்துமேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்ஒன்றுயி ராக்கும் அளவை உடலுறமுன்துய ராக்கும் உடற்குந் துணையதாநன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.
சொற்பிரிப்பு
நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்ஒன்றுயி ராக்கும் அளவை உடலுறமுன்துய ராக்கும் உடற்குந் துணையதாநன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.
சொற்பிரிப்பு
ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்பருவங்கள் தோறும் பயன்பல வானதிருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.
சொற்பிரிப்பு
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்பருவங்கள் தோறும் பயன்பல வானதிருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.
சொற்பிரிப்பு
புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்காரிய காரண ஈசர் கடைமுறைபேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்துஆணவம் நீங்கா தவரென லாகுமே.
சொற்பிரிப்பு
ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்காரிய காரண ஈசர் கடைமுறைபேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்துஆணவம் நீங்கா தவரென லாகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாமற்றைய மூன்றுமா மாயோ தயம்விந்துபெற்றவன்1 நாதம் பரையிற் பிறத்தலால்துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.பா-ம் : 1பெற்றவள்
சொற்பிரிப்பு
உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாமற்றைய மூன்றுமா மாயோ தயம்விந்துபெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால்துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

ஆகாய மாதி சதாசிவ ராதியென்போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.பா-ம் : 1அளித்ததே
சொற்பிரிப்பு
ஆகாய மாதி சதாசிவ ராதியென்போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்அளியார் திரிபுரை யாமவள் தானேஅளியார் சதாசிவ மாகி அமைவாள்அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.
சொற்பிரிப்பு
அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்அளியார் திரிபுரை யாமவள் தானேஅளியார் சதாசிவ மாகி அமைவாள்அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலிகாரணி காரிய மாகக் கலந்தவள்வாரணி ஆரணி வானவர் மோகினிபூரணி போதாதி1 போதமு மாமே.பா-ம் : 1பூதாதி
சொற்பிரிப்பு
வாரணி கொங்கை மனோன்மணி மங்கலிகாரணி காரிய மாகக் கலந்தவள்வாரணி ஆரணி வானவர் மோகினிபூரணி போதாதி போதமு மாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்என்றிவ ராக இசைந்திருந் தானே.
சொற்பிரிப்பு
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்என்றிவ ராக இசைந்திருந் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்ஒருவனு மேஉல கேழும் அளித்தான்ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்ஒருவனு மேஉல1 கோடுயிர் தானே.பா-ம் : 1மேஉடலோடுயிர்
சொற்பிரிப்பு
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்ஒருவனு மேஉல கேழும் அளித்தான்ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்ஒருவனு மேஉல கோடுயிர் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறைமைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்அந்தார் பிறவி அறுத்துநின் றானே.1பா-ம் : 1ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே
சொற்பிரிப்பு
செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறைமைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்அந்தார் பிறவி அறுத்துநின் றானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்திஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்றுநாடும் வழக்கமும் நான்அறிந் தேனே.
சொற்பிரிப்பு
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்திஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்றுநாடும் வழக்கமும் நான்அறிந் தேனே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

ஓராய மேஉல கேழும் படைப்பதும்ஓராய மேஉல கேழும் அளிப்பதும்ஓராய மேஉல கேழுந் துடைப்பதும்ஓராய மே உலகோடுயிர் தானே.1பா-ம் : 1உடலோடுயிர் தானே
சொற்பிரிப்பு
ஓராய மேஉல கேழும் படைப்பதும்ஓராய மேஉல கேழும் அளிப்பதும்ஓராய மேஉல கேழுந் துடைப்பதும்ஓராய மே உலகோடுயிர் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

நாதன் ஒருவனும் நல்ல இருவருங்கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்ஏது பணியென் றிசையும் இருவருக்காதி இவனே அருளுகின் றானே.
சொற்பிரிப்பு
நாதன் ஒருவனும் நல்ல இருவருங்கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்ஏது பணியென் றிசையும் இருவருக்காதி இவனே அருளுகின் றானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.
சொற்பிரிப்பு
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்போதித்த வானொலி பொங்கிய நீர்புவிவாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.
சொற்பிரிப்பு
ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்போதித்த வானொலி பொங்கிய நீர்புவிவாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.